கடற்படையிடம் நட்டஈடு கோரும் அவன்கார்ட் நிறுவனம்!

5700 70

சர்வதேசக் கடலில் பயணிக்கும் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் முன்னெடுத்துச் செல்லப்பட்ட ​பணியை, இலங்கைக் கடற்படையினர் பலவந்தமாகத் தடுத்ததால் ஏற்பட்டுள்ள நட்டத்துக்காக, இலங்கைக் கடற்படைத் தளபதிகள், 5 பில்லியன் ‌ரூபாயை நட்டஈடாகக் கொடுக்க வேண்டும் என்று, அவன்கார்ட் மெரிடைம் நிறுவனம், கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில், இன்று வழக்கொன்றைத் தாக்கல் செய்தது.

குறித்த நிறுவனத்தால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கின் பிரதிவாதிகளாக, சட்டமா அதிபர், பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ஆர்.சி.விஜேகுணரத்ன, முன்னாள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டி.எப்.எல்.சின்னையா மற்றும் கடற்படைத் தளபதி எஸ்.எஸ்.ரணசிங்க ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

Leave a comment