முல்லைத்தீவில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடுகள் (காணொளி)
முல்லைத்தீவு மாவட்டத்தை வறட்சியால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக பிரகடனப்படுத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடுகள் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக, முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் வே.ஆயர்குலன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் 2016ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் குறித்த மீளாய்வு கூட்டம் நேற்றைய தினம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போது கருத்து வெளியிட்ட முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் வே.ஆயர்குலன், கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள 40 வரையான குளங்கள் புனரமைப்பு

