மட்டக்களப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று மூன்றாவது ஆண்டிற்குள் நுழையும் தினத்தை முன்னிட்டு பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டன(காணொளி)

319 0

anarthamஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டு ஆண்டுகள் இன்றுடன் நிறைவுபெற்று மூன்றாவது ஆண்டிற்குள் நுழையும் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டன.

இன்று காலை மட்டக்களப்பில் உள்ள நான்கு வீதிகள் பொது மக்களின் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டன.

தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் மேலதிக பணிப்பாளர் எஸ்.அமலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

வெள்ள அனர்த்தத்தை குறைப்பதற்கான உட்கட்டுமான வேலைத்திட்டத்தின் கீழ் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் என்பனவற்றின் நிதியுதவியுடன் இந்த வீதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அமைச்சின் 40 இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டின் கீழ் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் நான்கு வீதிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன்அவை இன்று மக்களின் பாவனைக்காக வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட பல்வேறு திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.