அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 5 பேர் பலி
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஆரம்பப் பள்ளி ஒன்றில் புகுந்த ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 5 பேர் பலியாகினர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள தெஹமா கவுன்டி பகுதியில் அமைந்துள்ள ஆரம்ப பள்ளியில் துப்பாக்கியைக் கொண்டு ஒருவர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார். அவர் பள்ளியின் சுவர்கள் மற்றும் ஜன்னல்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இந்தத் தாக்குதலில் அப்பள்ளியிலிருந்த 5 பேர் பலியாகினர். பள்ளி மாணவர்கள் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கெவின் ஜான்சன்

