எம்.ஜி.ஆர். பிறந்த நாளில் தனிக்கட்சி தொடங்குகிறார் தீபா
தொண்டர்கள் வேண்டுகோளை ஏற்று எம்.ஜி.ஆர். பிறந்த நாளான வருகிற 17-ந்தேதி முதல் தனது அரசியல் பயணம் தொடங்கும் என்று தீபா அறிவித்துள்ளார். அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும், முதல்-அமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அவரது அண்ணன் ஜெயகுமாரின் மகள் தீபா, அரசியலுக்கு வரவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. அ.தி.மு.க.வில் ஒரு பிரிவை சேர்ந்தவர்களும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் தீவிர விசுவாசிகளும் தி.நகர் சிவஞானம் தெருவில் உள்ள தீபாவின் வீட்டு முன்பு தினமும் கூடி வருகின்றனர். அப்போது அவர்கள் தீபா,

