ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அலங்காநல்லூரில் திரண்ட இளைஞர்கள் மீது போலீஸ் தடியடி
போலீசாரின் கட்டுக்காவலையும் மீறி அலங்காநல்லூரில் நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. தடையை மீறி பேரணி, ஆர்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். வாடிவாசலில் திரண்ட முகநூல் நண்பர்கள் நள்ளிரவு வரை தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

