புதுக்குடியிருப்பு பொதுச்சந்தைக்கு புதிதாக மரக்கறிக்கடைத்தொகுதி (காணொளி)

330 0

puthukudijeruppuமுல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொதுச்சந்தையின் மரக்கறிக்கடைத்தொகுதி புதிதாக நிர்மானிக்கப்பட்டு திறந்து வைக்கப்படவுள்ளது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் கீழ் உள்ள முதன்மையான பொதுச்சந்தையாகக் காணப்படும் புதுக்குடியிருப்பு பொதுச்சந்தை போதிய வசதிகள் இன்றிக் காணப்படுகின்றன.

இதனையடுத்து கடந்த ஆண்டு பொதுச்சந்தையின் கடலுணவு விற்பனைத் தொகுதிக்கான புதிய கட்டடத்தொகுதி நிர்மானிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டநிலையில் மரக்கறி வாணிப தொகுதி மற்றும் ஏனைய கடைத்தொகுதிகள் தற்காலிக கொட்டகைகளில் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் கடந்து ஆண்டு நெல்சீப் திட்டத்தின் கீழ் 32 கடைகளைக்கொண்ட புதிய கட்டடத்தொகுதியொன்று கட்டி முடிக்கப்பட்டுள்ளதுடன் மிக விரைவில் குறித்த கட்டடத்;தொகுதி திறந்து வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

2016ம் ஆண்டில் நெல்சீப் திட்டத்தின்  கீழ் உள்ளுராட்சி திணைக்களத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 113.48 மில்லியன் ரூபா செலவிலான 12வேலைத்திட்டங்களில் ஒன்றாக குறித்த சந்தைத் தொகுதி அமைந்துள்ளது.