அனைத்து அரச நிறுவனங்களிலும் டெங்கு பரிசோதனை

Posted by - January 18, 2017

அரச நிறுவனங்களில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் அதிகரித்துள்ளமையால், எதிர்வரும் 24ம் திகதி பரிசோதனை மேற்கொள்ளும் வேலைத் திட்டத்தை முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன கோரிக்கை விடுத்துள்ளார். அனைத்து இராஜாங்க மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்களுக்கும், அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் மேற்கண்ட விடயத்தை கூறியுள்ளார். இதன்படி, அன்றையதினம் குறித்த அமைச்சுகளாலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், எதிர்வரும் 25, 26 மற்றும் 27ம் திகதிகளில் அனைத்து அரச நிறுவனங்களையும் அப் பகுதிக்கு

அமைச்சர்களுக்கு ஹிஸ்புல்லா அவசர கடிதம்

Posted by - January 18, 2017

நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி காலநிலை காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணத்தைப் பெற்றுக் கொடுக்குமாறு வலியுறுத்தி மூன்று அமைச்சர்களுக்கு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவசர கடிதம் அனுப்பி வைத்துள்ளார். அதற்கமைய, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரயதர்ஷன யாப்பா, விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மற்றும் நகர திட்டமிடல் மற்றும் நீர் முகாமைத்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கே இராஜாங்க அமைச்சர்

தமிழ்க் கல்விக் கழகத்தின் தமிழாலயங்கள் 14.01.2017 யேர்மனி முழுவதிலும் கொண்டாடி மகிழ்ந்த தமிழர் திருநாள் – பொங்கல் விழாவின் சில காட்சிகளின் சாட்சியங்கள்.

Posted by - January 17, 2017

கடந்த பல ஆண்டுகளாகத் தமிழாலயங்களின் பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் ஒருங்கிணைந்து கொண்டாடி வந்த பொங்கல்விழா இவ்வாண்டு அதன் வளர்ச்சிப்படிகளின் இரட்டிப்புநிலையைத் தொட்டுள்ளது. 120 தமிழாலயங்களும் தமது சூழ்நிலைக்கு ஏற்றவாறு அங்காங்கே ஒருங்கிணைந்து 70 க்கு மேற்பட்ட இடங்களில் தமிழர் புத்தாண்டைப் பொங்கி மகிழ்ந்தனர். தற்போது ஐரோப்பாவில் நிலவும் கடுமையான பனி வீழ்ச்சியும் அதனூடான கடும் குளிரையும் பொருட்படுத்தாது தமிழாலயங்களின் முற்றங்களில் கோலமிட்டு மும்பம் வைத்துப் பொங்கி கதிரவனுக்கு நன்றி செலுத்தியுள்ளனர். பொங்கலிடலைத் தொடர்ந்து பிற்பகல் சிறப்பான அரங்குகளில்

எல்லை நிர்ணய அறிக்கை அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம்

Posted by - January 17, 2017

எல்லை நிர்ணய அறிக்கை இன்று அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் கையளிக்கப்பட்டது. குறித்த அறிக்கையில் கைச்சாத்திடாதிருந்த ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிநிதி இன்று அதில் கைச்சாத்திட்டார். இதனை அடுத்தே குறித்த அறிக்கை அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது. இந்த அறிக்கையை பெற்றுக்கொண்டதன் பின்னர் ஊடக சந்திப்பை நடத்திய அமைச்சர் பைசர் முஸ்தபா, குறித்த அறிக்கையில் காணப்படும் சிற்சில விடயங்கள் திருத்தப்படவுள்ளதாக குறிப்பிட்டார். அந்த திருத்தப்பணிகள் நிறைவு பெற்றதும், அதனை உடன் வர்த்தமானியில் வெளியிட உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சிவில்ப்பாதுகாப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் பொங்கல் விழா

Posted by - January 17, 2017

சிவில்ப்பாதுகாப்பு திணைக்களத்தின் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சிக்கான இணைந்த  கட்டளைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் பொங்கல் விழா இன்று நடைபெற்றது இன்று காலை ஒன்பது முப்பதுமணிளவில் கிளிநொச்சி வட்டக்கச்சியில் உள்ள சிவில் பாதுகாப்புத்  திணைக்களத்தின் பண்ணையில் ஆரம்பிக்கப்பட்ட இப் பொங்கல் நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ரெயிநோல்ட் குரே பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டுஅங்கு நடைபெற்ற பொங்கல்  நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து சிவில்ப்பாதுகாப்பு திணைக்களத்தினால் அமைக்கப்பாட்ட  நாகதம்பிரான் கோவிலிலும் இடம்பெற்ற சிறப்பு வழிபாட்டிலும் கலந்துகொண்டதுடன்  பிரதமவிருந்தினர் உரையினையும்  நிகழ்த்தினார் இன் நிகழ்வில் வடமாகாண ஆளுநர்

தமிழர் விழாவுக்கு எதிர்க்கட்சித் தலைவரை வரவேற்க மட்டக்களப்பு தயார்

Posted by - January 17, 2017

மட்டக்களப்பில் வியாழக்கிழமை கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தமிழர் விழாவுக்கு இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களை வரவேற்பதற்கு மட்டக்களப்பு தயாராகி விட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் தமிழர் விழாவில் ஊர்வலமும், இன்னபிற தமிழர் பண்பாட்டு நிகழ்வுகளும் இடம்பெறும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளது. சுபவேளையான வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு மட்டக்களப்பு கல்முனை வீதி, கல்லடிப் பாலத்திலிருந்து ஆரம்பமாகும் தமிழர்

வேலைவாய்ப்பு கோரி வடமாகாண ஆளுநரிடம் முன்னாள் போராளிகள் மகஜர் கையளிப்பு

Posted by - January 17, 2017

கிளிநொச்சியில் உள்ள புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்புக்கள் ஏற்படுத்தி கொடுக்கப்படவில்லை என தெரிவித்து வடமாகாண ஆளுநரிடம் முன்னாள் போராளிகள் மகஜர் கையளித்துள்ளனர். கிளிநொச்சி சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பொங்கல் விழா, கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் அமைந்துள்ள வட்டக்கச்சி வயல் பண்ணையில் இன்று இடம்பெற்றது. இதன்போதே முன்னாள் போராளிகள் ஆளுநரிடம் மகஜர் கையளித்தனர். அத்துடன், வேலைவாய்ப்பு கோரி ஆளுநருடன் முன்னாள் போராளிகள் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர் இதன் பொது கருத்துத் தெரிவித்த வடமாகாண ஆளுநர் ரெயிநோல்ட் குரே குறித்த விடயத்தை

அரசியல்வாதிகளுக்குள் பிரச்சனைகளால் வடமாகணத்தில் இருந்து பணம் திரும்புகின்றது

Posted by - January 17, 2017

அரசியல்வாதிகளுக்குள் பிரச்சனைகளால் வடமாகணத்தில் இருந்து பணம் திரும்புகின்றது என  வடமாகாண ஆளுநர் ரெயிநோல்ட் குரே தெரிவித்தார் இன்றைய தினம் சிவில்ப்பாதுகாப்பு திணைக்களத்தின் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சிக்கான  இணைந்த கட்டளைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றபொங்கல் விழாவில் பிரதம  விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில் அரசியல்வாதிகளுக்குள் இருக்கும் பிரச்சனைகளால் வட  மாகாணத்திற்கு வரும் பணங்கள் செலவழிக்காமல் திரும்பிச்செல்கின்றது குறிப்பாக  இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கு மிகப்பெரிய  தொகைப்பணம் வந்தது

கிளிநொச்சியில் வரட்சிக்கான விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

Posted by - January 17, 2017

கிளிநொச்சியில் வரட்சிக்கான விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் கிளிநொச்சியில் இன்று செவ்வாய் கிழமை 17-01-2016 விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இடம்பெற்றுள்ளது. தற்போது நாட்டில் நிலவி வரும் கடும் வரட்சி காரணமாக எதிர்வரும் மாதங்களில் மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிா்கொள்ளவேண்டிய சூழல் ஏற்படும் என்பதனால் வரும் இருப்பதாம் திகதி முன்னா் ஜனாதிபதி செயலகத்தினால் வரட்சியினால் ஏற்படும்  பிரச்சினைகள், சவால்கள்  மற்றும் அதனை எதிா்கொள்வதற்கான  ஏற்பாடுகள் தொடா்பில் அறிக்கை ஒன்றை அனுப்புவதற்காகவும் விசேட ஒருங்கிணைப்புக் குழு

கிளிநொச்சியில் விபத்து – மூன்று மாணவர்கள் பலி

Posted by - January 17, 2017

கிளிநொச்சி கனகாம்பிகை குளம் பகுதில் இன்று இடம்பெற்ற விபத்தில் மூன்று மாணவர்கள் காயமடைந்தனர். மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. சம்பவத்தில் காயமடைந்த மணவர்கள் கிளி பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்