அனைத்து அரச நிறுவனங்களிலும் டெங்கு பரிசோதனை

248 0

dengue-page-upload-1அரச நிறுவனங்களில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் அதிகரித்துள்ளமையால், எதிர்வரும் 24ம் திகதி பரிசோதனை மேற்கொள்ளும் வேலைத் திட்டத்தை முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.

அனைத்து இராஜாங்க மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்களுக்கும், அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் மேற்கண்ட விடயத்தை கூறியுள்ளார்.

இதன்படி, அன்றையதினம் குறித்த அமைச்சுகளாலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், எதிர்வரும் 25, 26 மற்றும் 27ம் திகதிகளில் அனைத்து அரச நிறுவனங்களையும் அப் பகுதிக்கு உரிய பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளதாகவும் ராஜித்த தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

2016ம் ஆண்டு டெங்கு நோயாளர்களின் தொகை 54,727 எனவும் அதில் மரணித்தவர்கள் 78 பேர் எனவும் தெரியவந்துள்ளது.

அத்துடன், நாடுபூராகவுமுள்ள 65 அரச நிறுவனங்களில் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகமாக காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, 2017ம் ஆண்டு ஆரம்பமாகி இதுவரை கடந்துள்ள 17 நாட்களில் 1311 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.