கடந்த பல ஆண்டுகளாகத் தமிழாலயங்களின் பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் ஒருங்கிணைந்து கொண்டாடி வந்த பொங்கல்விழா இவ்வாண்டு அதன் வளர்ச்சிப்படிகளின் இரட்டிப்புநிலையைத் தொட்டுள்ளது. 120 தமிழாலயங்களும் தமது சூழ்நிலைக்கு ஏற்றவாறு அங்காங்கே ஒருங்கிணைந்து 70 க்கு மேற்பட்ட இடங்களில் தமிழர் புத்தாண்டைப் பொங்கி மகிழ்ந்தனர். தற்போது ஐரோப்பாவில் நிலவும் கடுமையான பனி வீழ்ச்சியும் அதனூடான கடும் குளிரையும் பொருட்படுத்தாது தமிழாலயங்களின் முற்றங்களில் கோலமிட்டு மும்பம் வைத்துப் பொங்கி கதிரவனுக்கு நன்றி செலுத்தியுள்ளனர்.
பொங்கலிடலைத் தொடர்ந்து பிற்பகல் சிறப்பான அரங்குகளில் தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்வுகளையும் நடாத்தி மகிழ்ந்தனர்.






























































