இமாச்சலப் பிரதேசத்தில் எலும்பை நொறுக்கும் கடும் பனிக்கு 17 பேர் பலி

Posted by - January 18, 2017

குளுகுளு மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தில் இந்த ஆண்டு பெய்துவரும் எலும்பை நொறுக்கும் கடும் பனிக்கு 17 பேர் பலியாகியுள்ளனர்.

டொனால்ட் டிரம்ப் பிறந்து, வளர்ந்த வீடு ஏலத்துக்கு வந்தது

Posted by - January 18, 2017

அமெரிக்காவின் வருங்கால அதிபரும் பிரபல தொழிலதிபருமான டொனால்ட் டிரம்ப் நியூயார்க் நகரில் பிறந்து, வளர்ந்த பூர்வீக வீடு ஏலத்துக்கு வந்தது.

சாம்சங் நிறுவன தலைவரிடம் மீண்டும் விசாரணை: விரைவில் கைதாகலாம் என தகவல்

Posted by - January 18, 2017

தென் கொரியா அதிபரின் நெருங்கிய தோழிக்கு லஞ்சம் கொடுத்து காரியம் சாதிக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள சாம்சங் நிறுவன தலைவரிடம் இன்று அரசு வழக்கறிஞர்கள் மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

பதவி காலத்தில் இறுதி முறையாக இன்று பத்திரிகையாளர்களை சந்திக்கும் ஒபாமா

Posted by - January 18, 2017

அமெரிக்காவின் புதிய அதிபராக வரும் 20-ந்தேதி டொனால்டு டிரம்ப் பதவி ஏற்கும் நிலையில் தனது பதவிக்காலத்தில் இறுதி முறையாக தற்போதைய அதிபர் ஒபாமா இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கிறார்.

பவானி குறுக்கே தடுப்பணைகள்: தமிழக அரசு இனியும் உறங்க கூடாது

Posted by - January 18, 2017

பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளை கட்டும் கேரள அரசின் முயற்சிகளை தடுத்து நிறுத்துவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார்.

தமிழகம், புதுச்சேரியில் இரவு முழுவதும் தொடர்ந்த இளைஞர்கள் போராட்டம்

Posted by - January 18, 2017

ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம், புதுச்சேரியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒன்று கூடி இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம், புதுச்சேரியில் இளைஞர்கள் இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையில் கடந்த 22 மணி நேரத்திற்கு மேலாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராடி வருகின்றனர். மெரினா கடற்கையில் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு இளைஞர்களின் வருகை அதிகரித்து வருவதால்

ஓரினச் சேர்க்கையை ஏற்றுக் கொள்ள முடியாது

Posted by - January 18, 2017

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை மீள வழங்குவது குறித்து பரிந்துரை செய்யப்பட்டுள்ள செயற்திட்டங்கள் 58 இல் 6-01 இருந்து 6-08 வரையான பிரிவுகளை நீக்க தீர்மானித்துள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். இந்த பிரிவுகளில் ஓருனச் சேர்க்கை குறித்த விடயங்கள் அடங்குவதாகவும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தால் முன்வைக்கப்பட்டுள்ள செயற்திட்டங்களில் ஏற்றுக் கொள்ளக்

இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை கலைப்பு

Posted by - January 18, 2017

இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் மைத்திரி குணரத்ன உள்ளிட்ட பணிப்பாளர் சபையை நீக்க, மின் சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய நடவடிக்கை எடுத்துள்ளார். 2009 – 2016ம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கை நிலக்கரி நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி கொள்வனவு தொடர்பாக, கடந்த 2016.12.30ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்கமைய, புதிய பணிப்பாளர் சபை

அரசின் முயற்சிகளை தடுக்க இலங்கை வைத்திய சபை தலையிட வேண்டும் – அனுர குமார

Posted by - January 18, 2017

மாலபே தனியார் வைத்திய கல்லூரியில் இருந்து வௌியேறும் மாணவர்களை வைத்தியர்களாக பதிவு செய்வது தொடர்பான அரசாங்கத்தின் வஞ்சகமான முயற்சிகளை நிறுத்த இலங்கை வைத்திய சபை தலையிட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி கோரியுள்ளது. அரசாங்கம் சில அரசியல் மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்காக இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக, அக் கட்சியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அனுர உள்ளிட்ட குழுவினர் இன்று இலங்கை வைத்திய சபைக்கு சென்ற வேளை ஊடகவியலாளர்களிடம் கருத்து வௌியிட்ட போதே