பதவி காலத்தில் இறுதி முறையாக இன்று பத்திரிகையாளர்களை சந்திக்கும் ஒபாமா

229 0

201701181036457689_Obama-to-hold-final-press-conference-today-White-House_SECVPFஅமெரிக்காவின் புதிய அதிபராக வரும் 20-ந்தேதி டொனால்டு டிரம்ப் பதவி ஏற்கும் நிலையில் தனது பதவிக்காலத்தில் இறுதி முறையாக தற்போதைய அதிபர் ஒபாமா இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கிறார்.

அமெரிக்காவின் புதிய அதிபராக வரும் 20-ந்தேதி டொனால்டு டிரம்ப் பதவி ஏற்கும் நிலையில் தனது பதவிக்காலத்தில் இறுதி முறையாக தற்போதைய அதிபர் ஒபாமா இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கிறார்.

அமெரிக்காவின் புதிய அதிபராக வரும் 20-ம் தேதி டொனால்டு டிரம்ப் பதவி ஏற்கிறார். எனவே, தற்போதைய அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது.

இந்நிலையில், வழக்கமாக வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் அவ்வப்போது பத்திரிகையாளர்களை சந்திக்கும் தற்போதைய அதிபர் பராக் ஒபாமா, தனது பதவிக்காலத்தில் கடைசி முறையாக இன்று (புதன்கிழமை) பிற்பகல் 2.15 மணியளவில் (இந்திய நேரப்படி இன்றிரவு 7.15 மணி) பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளிக்கவுள்ளார்.

அமெரிக்காவின் அதிபராக முதன்முறை பதவியேற்றபோது உணர்ச்சிப்பூர்வமான தனது பேச்சால் அனைவரையும் கட்டிப்போட்ட ஒபாமாவின் இறுதி உரை மற்றும் பேட்டியை நேரில் காண்பதற்கும், கேட்பதற்கும் அமெரிக்க மக்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள அரசியல் நோக்கர்களும் ஆவலுடன் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.