அரசின் முயற்சிகளை தடுக்க இலங்கை வைத்திய சபை தலையிட வேண்டும் – அனுர குமார

239 0

anuraமாலபே தனியார் வைத்திய கல்லூரியில் இருந்து வௌியேறும் மாணவர்களை வைத்தியர்களாக பதிவு செய்வது தொடர்பான அரசாங்கத்தின் வஞ்சகமான முயற்சிகளை நிறுத்த இலங்கை வைத்திய சபை தலையிட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி கோரியுள்ளது.

அரசாங்கம் சில அரசியல் மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்காக இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக, அக் கட்சியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அனுர உள்ளிட்ட குழுவினர் இன்று இலங்கை வைத்திய சபைக்கு சென்ற வேளை ஊடகவியலாளர்களிடம் கருத்து வௌியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கை வைத்திய சபையினால் மாலபே தனியார் வைத்தியக் கல்லூரி பிரச்சினை குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையிலும், குறித்த மாணவர்களை வைத்தியர்களாக ஒருபோதும் பதிவு செய்யக் கூடாது என பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.