எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா திருச்சியில் ஈழத் தமிழ் மக்களால் கொண்டாப்பட்டது!
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெரும் பலமாகத் திகழ்ந்தவருமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 100 வது பிறந்த நாளை முன்னிட்டு ஈழத் தமிழ் மக்கள் சார்பில் திருச்சி வாழ் ஈழத் தமிழ் மக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது. 100 ஆவது அகவையில்… பொன்மனச்செம்மல்! ஈழத் தமிழ் மக்களின் சுதந்திர வாழ்விற்காய் உண்மையாய்.. உறுதியாய்.. நின்று உணர்வோடு பலம் சேர்த்த உத்தமரே உந்தன் புகழ் ஓங்குக! வாழ்க! வாழ்க! வாழ்க! வையகம் உள்ள வரை வாழ்க!

