வெலிக்கடை சிறையிலிருந்து இந்த ஐவரே தப்பிக்க முயன்றனர்

241 0

155953595வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மரண தண்டனை கைதிகளில் ஐவர், சிறைகூண்டுகளை உடைத்துகொண்டு, தப்பிச்செல்வதற்கு திட்டம் தீட்டியுள்ளமை தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு, வாக்குமூலமளிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்ஹ பண்டார, வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிக்கு கட்டளையிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தொழிற்சங்க ஆலோசகராக இருந்த, முன்னாள் எம்.பியான பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர, படுகொலை வழக்கில், மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள ஐவரே இவ்வாறு தப்பியோடுவதற்கு சூழ்ச்சி செய்தாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

இதேவேளை, அந்த மரண தண்டனை சிறைகைதிகள் ஐவரும் தடுத்துவைக்கப்பட்டு சிறைகூண்டின் பிரதான ஜெயிலரையும், தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவிருக்கு, வாக்குமூலமளிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பாரத லக்ஷ்மன் கொலை வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள, அனுஷ குமார டி மெல்,ஷமிந்த ரவி ஜயநாத், சரத் பண்டார, பியந்த ஜானக்க பண்டார மற்றும் துமிந்த சில்வா (முன்னாள் எம்.பி) ஆகிய ஐவருமே, இவ்வாறு தப்பியோடுவதற்கு சூழ்ச்சி செய்திருந்ததாக குற்றப்புலனாய்வு பிரிவினர், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்துக்கு திங்கட்கிழமை (16) அறிக்கையிட்டிருந்தனர்.

இந்த ஐவரும் தப்பியோடுவதற்கு திட்டம் தீட்டியுள்ளதாக வெளியாகியிருந்த செய்தி தொடர்பில், குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியிருந்தார். அதனடிப்படையிலேயே இரகசிய பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டு, அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

இந்த மரண தண்டனை கைதிகளின் பாதுகாப்புக்காக கடைபிடிக்கப்படும் முறைமைகள், சிறைக்கைதிகளின் உறவினர்கள் மற்றும் ஏனைய நபர்கள், சிறைக்கைதிகளுடன் சந்திக்கும் போது மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு முறைமைகள், இந்த மரண தண்டனை கைதிகள் ஐவரும் தப்பியோடுவதற்கு சூழ்ச்சி செய்தமை தொடர்பில் சிறைச்சாலைகள் புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளதா? என்பது தொடர்பிலேயே வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரி மற்றும் சிறைகூண்டின் பிரதான ஜெயிலர் ஆகியோரிடம் வாக்குமூலம் பெறவேண்டுமென குற்றப்புலனாய்வு பிரிவினர், நீதிமன்றத்திடம் கோரியிருந்தனர். அந்தக் கோரிக்கைக்கே நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.