ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒட்டியிருக்கும் வரையில் கூட்டுச் சேர்தல் என்பது சாத்தியமற்றது-பிரசன்ன ரணதுங்க
நாட்டிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மையானவர்கள் மஹிந்த ராஜபக்ஷவுடன்தான் இருக்கின்றார்கள் என்பதை இன்றைய சந்திப்பின் போது மாகாண முதலமைச்சர்கள் ஏற்றுக் கொண்டார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் மாகாண முதலமைச்சர்கள் இன்று காலை நடாத்திய கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். கொழும்பிலுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபுர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் மஹிந்த ராஜபக்ஷவின் குழு சார்பாக பிரசன்ன

