சுவிசில் நடைபெற்ற கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு.

Posted by - January 24, 2017

வங்கக் கடலின் நடுவே தியாக வேள்வித் தீயினில் சங்கமித்து வீரகாவியமான கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வானது 21.01.2017 சனிக்கிழமை அன்று ஆர்கவ் மாநிலத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது. சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வெழுச்சி நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன், தமிமீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. மக்களால் மலரஞ்சலி செலுத்தப்பட்ட வேளையில் இளம் இசைக்கலைஞர்களால் எழுச்சிப் பாடல்களும்; இசைக்கப்பட்டது. அழித்துக் கொள்வோம், அடிபணியோம்

வலம்புரி சங்கை விற்க முயற்சித்தவர்கள் ஏற்பட்ட பரிதாப நிலை

Posted by - January 24, 2017

10 கோடி பெறுமதியான வலம்புரிச் சங்கை விற்பனை செய்ய முயன்றதாக தெரிவித்து, மட்டக்களப்பில் 7 பேர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்குடாவில் வைத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது. அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட ஒன்றரை அடி நீளமான வலம்புரி சங்கு மட்டக்களப்பு மாவட்ட வனவள பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்டவர்கள் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசிபிக் பிராந்திய கூட்டு ஒப்பந்தம் இரத்து

Posted by - January 24, 2017

அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய வர்த்தக கூட்டு ஒப்பந்தத்தை அந்த நாட்டின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரத்து செய்துள்ளார். அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, நியுசிலாந்து உள்ளிட்ட 12 பசுபிக் நாடுகளுக்கு இடையில் இந்த உடன்படிக்கை முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகத்தினால் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது. இது அமெரிக்காவுக்கு ஏற்பட்ட அனர்த்தம் என்று டொனால்ட் ட்ரம்ப் தமது தேர்தல் பிரசாரங்களின் போது தெரிவித்து வந்தார். இந்த நிலையில் குறித்த உடன்படிக்கையை ரத்து செய்ததன் ஊடாக, தாம் அமெரிக்காவை பாதுகாத்திருப்பதாக

பொது மக்களின் உடமைகளை அடித்து தீ வைக்கும் காவற்துறையினர்

Posted by - January 24, 2017

தமிழ் நாட்டின் காவற்துறையினர் ஏறுதழுவுதல் போட்டிகளுக்கு ஆதரவாக இடம்பெற்ற போராட்டத்தின் போது செயற்பட்ட விதம் குறித்து பல்வேறு தரப்பினரால் கண்டனங்கள் தெரிவிக்கப்படுகின்றன. சென்னை – மெரீனா கரையில் இடம்பெற்று வந்த அமைதி போராட்டத்தில் நேற்று காலையில் இருந்து கலவரம் ஏற்பட்டது. இதற்கு சில சமுகவிரோதிகளின் செயற்பாடே காரணம் என்று காவற்துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனப்போதும், காவற்துறை அதிகாரிகள் திட்டமிட்டு பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியமை, முச்சக்கர வண்டி மற்றும் உந்துருளிகளுக்கு தீ வைத்தமை உள்ளிட்ட பல சம்பவங்கள்

முறி விநியோகம் தொடர்பான விவாதம் இன்று…

Posted by - January 24, 2017

மத்திய வங்கியின் பிணை முறி விநியோகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் குறித்த கோப் குழு அறிக்கையின் விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. காலை 9.30 முதல் இரவு 7.30 வரையில் இந்த விவாதம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், மத்திய வங்கியின் பிணை முறி தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தை அரசாங்கம் பிற்போட முயற்சிப்பதாக ஜே. வி. பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின்போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மத்திய

சுவிட்சர்லாந்தில் அகதி அந்தஸ்து கோருவதில் இலங்கை முன்னணியில்

Posted by - January 24, 2017

சுவிட்சர்லாந்தில் அகதி அந்தஸ்த்து கோருகின்றவர்களில் இலங்கையர்களும் முன்னணி வகிக்கும் நாட்டவர்களில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சுவிட்சர்லாந்தில் அகதி அந்தஸ்த்து கோரியவர்களின் எண்ணிக்கை 3ல் ஒரு பங்காக குறைவடைந்துள்ளது. எனினும் இலங்கையர்களின் அகதி அந்தஸ்த்து கோரும் விண்ணப்பங்கள் அதிகரித்த நிலையிலேயே இருக்கிறது. எரிட்டேரியாவைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான், சிரியா, சோமாலியா ஆகிய நாடுகளை அடுத்து இலங்கையைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் அகதி அந்தஸ்த்து கோரி விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோசப் பரராஜசிங்கம் கொலை – நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - January 24, 2017

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 4 பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட நீதவானும் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதிபதியுமான எம்.பி.முகைதீன் முன்னிலையில் இவர்களை ஆஜர்படுத்தியபோதே, இவர்களுக்கான விளக்கமறியலை நீதவான் நீடித்துள்ளார். கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும்

‘பிரபாகரன் சந்தர்ப்பங்களை தவறவிட்டவர்’ – டக்ளஸ் தேவானந்தா

Posted by - January 24, 2017

“தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு, அரசிடம் பேரம் பேசும் சந்தர்ப்பம் கிடைத்த போதும், அவர் அதனை பயன்படுத்தவில்லை” என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு கூறினார். “அரசிடம் பேரம் பேசும் சந்தர்ப்பம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த போதும் அவர்கள் அதனை பயன்படுத்தவில்லை. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அச்சந்தர்ப்பம் பல முறை

 சென்னை வீதிகளுக்கு சீல – இளைஞர்கள் விரட்டியடிப்பு

Posted by - January 24, 2017

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை விரட்டிக்கும் தமிழக காவல்துறையினர், சென்னையில் மெரினா கடற்கரைக்கு செல்லும் அனைத்து வீதிகளைம் மூடி சீல் வைத்துள்ளனர். மெரினா கடற்கரையில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டுள்ள இளைஞர்கள், ராயப்பேட்டை மற்றும் திருவல்லிக்கேணியில் உள்ள வீதிகளில் குவிந்துள்ளனர். அவர்கள் மீண்டும் கடற்கரை பகுதிக்கு செல்லாமல் இருக்க காவல்துறையினர், அனைத்து வீதிகளுக்கும் சீல் வைத்துள்ளனர். கடற்கரை வீதியுடன் இணையும் பாதைகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். வேளச்சேரியில் இருந்து கடற்கரை வரை இயக்கப்படும் மேம்பால ரயில் நிறுத்தப்பட்டுள்ளது.  

பிணைமுறி விசாரணைகளுக்காக ஜனாதிபதி ஆணைக்குழு

Posted by - January 24, 2017

இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி கொடுக்கல் வாங்கல் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் பற்றி புலனாய்வு மற்றும் விசாரணை மேற்கொண்டு அதற்குரிய சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்காக, ஜனாதிபதி விசேட விசாரணை ஆணைக்குழுவை நியமிப்பதற்கு, சட்ட மா அதிபருக்கு, ஜனாதிபதியினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற நீதியரசர், மேல் நீதிமன்ற நீதியரசர் மற்றும் கணக்காய்வு நிபுணர் ஆகியோரை உள்ளடக்கிய மூன்று பேர் அடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் இந்த வாரம் வெளியிடப்படவுள்ளது. குறித்த ஆணைக்குழுவின் விதந்துரைகளுடனான அறிக்கை