TNA உறுப்பினர்கள் 8 பேர் வரவு – செலவு திட்டத்திற்கு எதிர்ப்பு

Posted by - November 16, 2017

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 2018ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டம் தொடர்பில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையே ஏற்பட்ட கருது முரண்பாடுகள் காரணமாக, இன்று இடம்பெறவிருக்கும் வரவு – செலவு திட்டம் மீதான இரண்டாவது வாக்கெடுப்பின் போது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் 8 பாராளுமன்ற உறுப்பினர் வரவு – செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக அக்கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை இது தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று காலை எதிர்க்கட்சித்

பிரதான புகையிரத போக்குவரத்து பாதையில் பயண தாமதம்

Posted by - November 16, 2017

வெயங்கொடை மற்றும் கம்ஹாவுக்கு இடையில் புகையிரதம் ஒன்று பழுதடைந்ததன் காரணமாக பிரதான புகையிரத போக்குவரத்து பாதையில் பயண தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

போதிய பெண் பிரதிநிதித்துவம் இல்லாத வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படும் – வர்த்தமானி அறிவித்தல்

Posted by - November 16, 2017

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் இடம்பெற வேண்டிய முறை தொடர்பில், எதிர்வரும் 10 தினங்களுக்குள் வர்த்தமானி அறிவித்தலை வௌியிடவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது ஒவ்வொரு கட்சியும் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்கையில், அதில் உள்ளடக்கப்பட வேண்டிய பெண் பிரதிநிதிகளின் தொகை, அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்படவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், உரிய எண்ணிக்கையிலான பெண் வேட்பாளர்கள் இல்லாவிடில், அந்த கட்சியின் வேட்பு மனுக்கள் நிச்சயம்

தெண்டமான் பெயர் நீக்கம் – இலங்கையுடன் பேசுவதாக சுஷ்மா உறுதி

Posted by - November 16, 2017

அரச நிறுவனம் ஒன்றில் இருந்து, சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயர் நீக்கப்பட்டமை குறித்து அவதானம் செலுத்துவதாக, இந்திய வௌிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். ஹட்டனில் சௌமியமூர்த்தி தொண்டமான் பெயரில் இயங்கிவந்த தொழில் பயிற்சி நிலையத்தின் பெயரை, பூல்பேங் தொழில் பயிற்சி நிலையம் என அண்மையில் மாற்றினர். இந்த விடயம் மலையக தமிழர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழகத்திலுள்ள அரசியல் பிரமுகர்களும் இதற்கு எதிர்ப்பு வௌியிட்டு வருகின்றனர். இந்தநிலையில், தமிழகத்தின் முக்கிய கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின்

முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில் புதிய இறைவரி – ரணில் விக்கிரமசிங்க

Posted by - November 16, 2017

இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கும் வேலைத் திட்டத்தில் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில் புதிய இறைவரி சட்டத்தின் கீழ் நிவாரணங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ‘இன்டெக்ஸ் ஏசியா 2017′ என்ற தெற்காசியாவின் ஆடை உற்பத்தி கண்காட்சி நேற்று கொழும்பு கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது. குறித்த கண்காட்சியை ஆரம்பித்துவைத்து உரையாற்றும்போது பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். குறித்த கண்காட்சியில் பிரதமர் மேலும் தெரிவிக்கையில், இந்த திட்டங்களுக்காக அரசாங்கம் 500 கோடி ரூபாவை இந்த ஆண்டு

திருச்சூர் பூரம் விழாவில் மக்களுக்கு உணவில் விஷம் வையுங்கள்: ஐ.எஸ். பயங்கரவாதியின் மிரட்டல் ஆடியோ

Posted by - November 16, 2017

திருச்சூர் பூரம், கும்பமேளா விழாக்களின்போது உணவில் விஷம் வைத்து பெரும் அளவில் மக்களை கொன்று குவியுங்கள் என்று ஐ.எஸ். பயங்கரவாதி விடுத்த ஆடியோ மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

‘கொடிய குற்றவாளி; மரண தண்டனைக்கு உரியவர்’ – டிரம்ப் மீது வடகொரியா கடும் சாடல்

Posted by - November 16, 2017

கிம் ஜாங் அன் தோற்றத்தை விமர்சித்த டிரம்ப் கொடூரமான குற்றவாளி என்பதையும், கொரிய மக்களால் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளவர் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

சர்வாதிகாரத்தால் உலகை மிரட்டி பணியவைக்க முடியாது: வடகொரியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

Posted by - November 16, 2017

சர்வாதிகாரத்தால் உலகை மிரட்டி பணியவைக்க முடியாது என வட கொரியாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாகிஸ்தானில் குண்டுகாயங்களுடன் 15 பேரின் உடல்கள் மீட்பு

Posted by - November 16, 2017

பாகிஸ்தானில் புலோடா என்கிற இடத்தில் போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு துப்பாக்கி குண்டு காயங்களுடன் 15 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

நைஜீரியாவில் 4 தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதல்: 14 பேர் உயிரிழப்பு

Posted by - November 16, 2017

நைஜீரியாவில் ஒரே இடத்தில் 2 பெண்கள் உள்ளிட்ட 4 தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர்.