முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில் புதிய இறைவரி – ரணில் விக்கிரமசிங்க

233 0

இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கும் வேலைத் திட்டத்தில் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில் புதிய இறைவரி சட்டத்தின் கீழ் நிவாரணங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

‘இன்டெக்ஸ் ஏசியா 2017′ என்ற தெற்காசியாவின் ஆடை உற்பத்தி கண்காட்சி நேற்று கொழும்பு கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.

குறித்த கண்காட்சியை ஆரம்பித்துவைத்து உரையாற்றும்போது பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

குறித்த கண்காட்சியில் பிரதமர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த திட்டங்களுக்காக அரசாங்கம் 500 கோடி ரூபாவை இந்த ஆண்டு ஒதுக்கியுள்ளதாகவும், இதன் கீழ் புதிதாக வர்த்தக முயற்சிகளை ஆரம்பிக்கும் முதலீட்டாளர்களுக்கு 100க்கு 200 வீதம் மூலதனக் கொடுப்பனவுகளை இரண்டு வருடங்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படும்.

போட்டித் தன்மை அடிப்படையில் முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதுடன் தனியாக அபிவிருத்தி வங்கி உருவாக்கப்பட்டு அதன் மூலம் நிதி பெற்றுக்கொடுக்கப்படும்.முதலீட்டாளர்களுக்கு வெளிநாட்டு சந்தை வாய்ப்பை பெற்றுக்கொடுப்பதற்கும் சர்வதேச ஏற்றுமதி கைத்தொழில் மற்றும் தேவைகள் எமது நாட்டிற்கு பெற்றுக்கொள்ளவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்

Leave a comment