அமெரிக்காவின் தடைக்கு பிரித்தானியா எதிர்ப்பு

Posted by - January 29, 2017

முஸ்லிம் நாடுகளின் அகதிகள் மீதான அமெரிக்காவின் தடைக்கு பிரித்தானியா எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. பிரித்தானிய பிரதமர் தெரேசா மே யை மேற்கோள்காட்டி சர்வசே ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் இந்த செயற்பாட்டிற்கு தெரேசா மே தமது கண்டனத்தையும் வெளியிட்டுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் இந்த புதிய சட்டமானது பிரித்தானிய பிரஜைகளை பாதிக்கும்பட்சத்தில் அதற்கு எதிரான மேன்முறையீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பிரித்தானியா எச்சரித்துள்ளது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் சுமார் ஏழு நாடுகளின் அகதிகளுக்கு நான்கு மாதங்களுக்கு

உலகில் ஊழல் மிகுந்த நாடாக இலங்கை பெயரிட்டுள்ளது – ஒன்றிணைந்த எதிர்கட்சி கவலை

Posted by - January 29, 2017

அதிக கடன் சுமை காரணமாக நாட்டை பாதிக்கும் உடன்படிக்கைகளினூடாக வெளிநாட்டு முதலீடுகள் இலங்கைக்குள் கொண்டுவரப்படுவதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற விசேட ஊடக சந்;திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார். ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நேஷனல் நிறுவனம் உலகில் ஊழல் மிகுந்த நாடாக இலங்கையை பெயரிட்டுள்ளதாக அவர் இதன்போது குறிப்பிட்டார். பட்டினியில் தவிக்கும் நாடுகளின் பட்டியலிலும் இலங்கை 84 ஆம் இடத்தில் உள்ளதாக பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். சர்வதேச ஆய்வுகளுக்கு அமைய அரசாங்கத்தின்

ஆட்சி நிர்வாகம் சாதாரண மக்களின் கைகளுக்கு கிட்டும்வரை நாட்டில் சிறந்த மாற்றம் ஒன்று ஏற்படப் போவதில்லை – ஜே வி பி

Posted by - January 29, 2017

சொத்துள்ள வகுப்பினரின் வசமுல்ல இந்த நாட்டின் ஆட்சி நிர்வாகம் சாதாரண மக்களின் கைகளுக்கு கிட்டும்வரை நாட்டில் சிறந்த மாற்றம் ஒன்று ஏற்படப் போவதில்லை என ஜே வி பி தெரிவித்துள்ளது. ஜே வி பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தம்புத்தேகமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இதனை தெரிவித்துள்ளார். நாட்டின் அத்தியாவசிய சேவைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படுவதில்லை. மாணவர்களின் கல்வியில் அநீதி இழைக்கப்படுகின்றது. பிள்ளைகள் சுதந்திரமாக செயற்படுவதற்கான சந்தர்ப்பம் இல்லாது போயுள்ளது. ரோபோக்களை போன்ற ஒரு எதிர்கால சமுதாயம் உருவாக்கப்படுகின்றது.

ரஷ்ய பெண்ணுக்கு பாலியல் தொல்லை – காவல்துறையின் ஒருவருக்கு விளக்கமறியல் ஒருவருக்கு பிணை

Posted by - January 29, 2017

கல்கிசை கடற்கரை பகுதியில் வைத்து ரஷ்ய பெண்ணொருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட காவல்துறையைச் சேர்ந்த இருவரில் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதன்போது கைது செய்யப்பட்டிருந்த மற்றுமொருவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்கள் இன்று கல்கிஸ்ஸ நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது ஒருவரை எதிர்வரும் 9ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கல்கிஸ்ஸ நீதவான் உத்தரவிட்டார். மற்றையவர் 2 இலட்சம் ரூபா சரீரப்பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸ கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்த ரஷ்ய நாட்டு

கல்முனையின் ஆணின் உடலம் மீட்பு

Posted by - January 29, 2017

கல்முனை நற்பிட்டிமுனைக் கிராமத்தில் ஆணொருவரின் உடலம் அவரது உறவினர் ஒருவரின் வீட்டிலிருந்து இன்று மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர். உடலமாக மீட்கப்பட்டவர் அதே பிரதேசத்தை சேர்த்த 30 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இறப்பதற்கு முன்னர் தனது உறவினர்களுடன் விருந்துபசாரத்தில் ஈடுப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னார் படகு விபத்து தந்தையும் மகனும் பலி

Posted by - January 29, 2017

மன்னார் சவூத்பார் கடற் பிரதேசத்தில் படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் 9 வயது சிறுவன் ஒருவனும் அவனது தந்தையும் உயிரிழந்தனர். இவர்களது உடலங்கள் மன்னார் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. குறித்த இருவரும் நேற்று இரவு ஏழு மணி அளவில் கடற்தொழிலுக்காக கடலுக்கு சென்றுள்ளனர். இதன்போது இவர்கள் பயணித்த படகு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் கடலுக்குள் மூழ்கியவர்களை மீட்கும் பணிகளை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது 9 வயது சிறுவனின் உடலம் மீட்கப்பட்டது. நீரில் மூழ்கிய தந்தையின் உடலம் மீட்கப்படாத நிலையில்

சுற்றுலாப் பயணிகளுடன் மலேஷிய படகு ஒன்று காணாமல் போயுள்ளது.

Posted by - January 29, 2017

சுற்றுலாப் பயணிகளுடன் பயணித்த மலேஷிய படகு ஒன்று காணாமல் போய் உள்ளதாக மலேஷிய கரையோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர். காணாமல் போன படகில் 28 சுற்றுலாப் பயணிகள் உட்பட 31 பயணிகள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சீன புதுவருடத்தை கொண்டாடும் நோக்கில் மலேஷிய கிழக்கு கடற்பிராந்தியத்தில் உள்ள சபா சுற்றுலாத் தலத்தை நோக்கி சென்று கொண்டிருந்த வேளையில், படகுடனான தொடர்பு செயலற்றுப் போனதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை காணாமல் போன இந்த படகினை தேடும் பணிகள் தற்போது முனைப்புடன்

டொனால்ட் ட்ரம்பின் அகதிகளை நாடுகடத்தும் நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை

Posted by - January 29, 2017

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அகதிகளை நாடுகடத்தும் நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை ஒன்றினை அமெரிக்க நீதிமன்றம் ஒன்று விதித்துள்ளது. நுழைவு அனுமதி பெற்ற நிலையில் அமெரிக்காவில் அகதிகளாக உள்ளவர்களை நாடுகடத்தும் நடவடிக்கைகளை நிறுத்தும் படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க சிவில் விடுதலை ஒன்றியத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை விசாரித்த நீதிபதி இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். நேற்று அமுல்படுத்தப்பட்ட இந்த புதிய திட்டத்திற்கு அமைய நாடுகடத்தும் நோக்கில் சுமார் 200 பேர் வாநூர்த்தி நிலையங்கள் மற்றும் இடைத்தங்கல் முகாம்களில்

மாணவர்கள் இன மத மொழி போதமின்றி கல்வி பயில வேண்டும் – கல்வி இராஜாங்க அமைச்சர்

Posted by - January 29, 2017

இலங்கையில் இன ஐக்கியத்தையும் நல்லுறவையும் பேணுவதற்கு மாணவர்கள் இன மத மொழி போதமின்றி கல்வி பயில வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் நுவரெலியா புனித திருத்துவ கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார். இதற்கமைய இலங்கையில் புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற இன பேதமின்றி ஒரே பாடசாலையாக இயங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் இலங்கையில் இன ஐக்கியத்தையும் நல்லுறவையும்

காத்தான்குடியில் ஆணின் உடலம் மீட்பு

Posted by - January 29, 2017

காத்தான்குடி – பாலமுனை – நடுவோடை கடற்கரைப் பகுதியில் கரையொதுங்கிய நிலையில் ஆணெருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட உடல் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பில் கடற்தொழிலாளர்கள் காவற்துறையினருக்கு அறிவித்ததனை அடுத்து காத்தான்குடி காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.