பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் ஐவர், தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்(காணொளி)
வடக்கில், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் ஐவர், தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். அண்மையில் கிளிநொச்சி மற்றும் ஏனைய மாவட்டங்களில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களான முன்னாள் போராளிகள் ஐந்து பேர், நேற்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தபட்டனர். இதன்போது சந்தேக நபர்கள் தங்கள்மேல் சுமத்தப்பட்ட குற்றங்களை தாம் செய்யவில்லை எனவும், கைப்பற்றப்பட்ட சான்றுப் பொருட்கள் தம்மிடமிருந்து எடுக்கப்பட்டவை அல்ல எனவும், தாம் அக்குற்றங்களை தாம் புரியவில்லை

