யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு அறிவித்தல்!

Posted by - January 31, 2017

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தின் முதலாம், இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் வருட மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

நாமல் உள்ளிட்ட ஐவரின் வங்கிக் கணக்குகளை பரிசோதிக்க நீதிமன்றம் உத்தரவு!

Posted by - January 31, 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவரின் வங்கிக் கணக்குகளை பரிசோதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றங்களில் நிலவும் 180 வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை

Posted by - January 31, 2017

நீதிமன்றங்களில் நிலவும் 180 வெற்றிடங்களை நிரப்புவதற்கு நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இராணுவத்தினரைக் கொண்டு கஞ்சா பயிரிடுவேன்: ராஜித

Posted by - January 31, 2017

இராணுவத்தினரைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் கஞ்சாவைப் பயிரிட உள்ளதாக சுகாதார மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

வவுனியா வர்த்தக நிலையத்தில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது

Posted by - January 31, 2017

வவுனியா வர்த்தக நிலையத்தில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா ஹொறவப்போத்தான வீதியிலுள்ள வியாபார நிலையங்கள் இரண்டை உடைத்து பணம் திருடப்பட்டது. திருட்டுச் சம்பவம் இன்று அதிகாலை 1.30மணியளவில் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார், சந்தேக நபர் ஒருவரை கைது செய்ததுடன் அவரது வீட்டில் மேற்கொண்ட சோதனையின்போது கட்டுத்துவக்கு ஒன்றையும் கைப்பற்றியிருந்தனர்.

நுவரெலியா ஸ்கிராப் தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் திருட்டு(காணொளி)

Posted by - January 31, 2017

நுவரெலியா ஸ்கிராப் தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நேற்று இரவு திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 2016 ஆம் ஆண்டு யூலை மாதம் 14 ஆம் திகதி இவ்வாலயத்தின் கும்பாபிஷேகம் நடைபெற்றபோது அம்மனுக்கு தங்க நகைகள் அணிவிக்கப்பட்டதாகவும், குறித்த நகைகளே திருடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸாருக்கு முறையிடப்பட்டதை அடுத்து, பொலிஸார் மோப்பநாய்களுடன் ஆலய கட்டிட வளாகத்திற்கு சென்று தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும், இத்தோட்டத்தில் உள்ள

மன்னார், குஞ்சுக்குளம் பகுதியில் தமிழ் மக்களுக்கு சொந்தமான 200 ஏக்கர் விவசாய நிலங்களை, வன இலாகாவினர் சுவீகரிக்க முயற்சி(காணொளி)

Posted by - January 31, 2017

மன்னார், குஞ்சுக்குளம் பகுதியில் தமிழ் மக்களுக்கு சொந்தமான 200 ஏக்கர் விவசாய நிலங்களை, வன இலாகாவினர் சுவீகரிக்க முயற்சி எடுத்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மன்னார், மடு பிரதேச செயலகர் பிரிவிற்குட்பட்ட குஞ்சுக்குளம் பகுதியில் 1965ஆம் ஆண்டு முதல் விவசாயம் செய்து வந்த நிலங்கள் கடந்தகால யுத்த சூழ்நிலை காரணமாக, விவசாயம் செய்ய முடியாது கைவிடப்பட்டிருந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 35 வருடங்களாக இடம்பெயர்ந்து மீள்குடியேற்றம் செய்யப்பட்டபோதும், சொந்த நிலங்களில் விவசாயத்தை மேற்கொள்ள முடியாதுள்ளதாகவும் வனஇலாகா திணைக்கத்தினர்

அரசடி வீதியிலுள்ள கடையொன்றில் நேற்றிரவு நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட ஐவர் அடையாளம்  காணப்பட்டுள்ளனர் (காணொளி)

Posted by - January 31, 2017

நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் வந்த முகமூடி அணிந்த இளைஞர்கள் கடையொன்றில் பணியாற்றிய இளைஞர்கள் மீது வாள்வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளதுடன், கடைக்கும் தீயிட்டமை தொடர்பில் யாழ் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். குறித்த கடையினுள் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி கமரா பதிவுகளை அடிப்படையாக கொண்டு இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் அரசடி வீதியிலுள்ள கடையொன்றுக்குள் நேற்றிரவு புகுந்த முகமூடி அணிந்த நபர்களால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர். நேற்றிரவு 7.15 அளவில் கடைக்குள் புகுந்த குறித்த நபர்கள்