வவுனியா வர்த்தக நிலையத்தில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது

257 0

வவுனியா வர்த்தக நிலையத்தில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா ஹொறவப்போத்தான வீதியிலுள்ள வியாபார நிலையங்கள் இரண்டை உடைத்து பணம் திருடப்பட்டது.

திருட்டுச் சம்பவம் இன்று அதிகாலை 1.30மணியளவில் இடம்பெற்றது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார், சந்தேக நபர் ஒருவரை கைது செய்ததுடன் அவரது வீட்டில் மேற்கொண்ட சோதனையின்போது கட்டுத்துவக்கு ஒன்றையும் கைப்பற்றியிருந்தனர்.