டெங்கு நோயை ஒழிக்க புதிய செயற்திட்டம் – ஜனாதிபதி
டெங்கு நோயை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களுக்கு மேலதிகமாக புதிய செயற்திட்டமொன்று அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த புதிய செயற்திட்டம் வெற்றிபெறுவதற்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். தேசிய பல் போதனா மருத்துவமனைக்கான புதிய கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மக்களைப் பாதுகாப்பதற்காக சுகாதார துறைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மருத்துவ நிபுணர்கள்

