நாமல் ராஜபக்ஸ 15ஆம் திகதி ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.

352 0

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எதிர்வரும் 15ஆம் திகதி கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாவார் என அவரது சட்டத்தரணிகள் உயர்நீதிமன்றத்திடம் அறிவித்துள்ளனர்.

பல தடவைகள் அவரை குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல்கள் விடுக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகாததன் காரணமாக, கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அபகீர்த்திக்கு உள்ளாவதாக தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் சட்டத்தரணிகள் இதனைத் தெரிவித்தார்.

இந்த வழக்கு மீண்டும் பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவுள்ளது.