மட்டக்களப்பு ஏறாவுர்பற்று 01 கல்விக் கோட்டத்தின் தைப்பொங்கல் கலாசார விழா மட்டக்களப்பு ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் அனுசரணையில் மதரீதியாகவும் கலாசார ரீதுயாகவும் ஒன்றிணைந்து கொண்டாடும் தைப்பொங்கல் விழா மட்டக்களப்பு ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தில் இன்று நடைபெற்றது.
ஏறாவுர்பற்று கோட்டக்கல்வி பணிப்பாளர் எம்.பாலசுப்பிரமணியம் தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் கலந்துகொண்டு கல்விக் கோட்டத்தின் தைப்பொங்கல் கலாசார விழாவை ஆரம்பித்து வைத்தார்.
பொங்கல் விழா நிகழ்வில் மதத்தலைவர்கள், ஏறாவூர் பற்று கல்விக் கோட்ட பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், சகோதர பாடசாலைகளான முஸ்லிம் மாணவர்கள் மற்றும் மகா ஓயா கல்வி வலயத்தின் பெதிரேக்க வித்தியாலய மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது தமிழர் பண்பாட்டு விழுமியங்களையும், சகோதர இன கலாசார பண்பாடுகளையும் பாடசாலை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பாரம்பரியங்களை பறைசாற்றும் கலாசார நிகழ்வுகளும், அலங்காரங்களும் பொங்கல் விழா நிகழ்வில் இடம்பெற்றிருந்தனை.

