5-ந் தேதி ஜல்லிக்கட்டு: அவனியாபுரம் வாடிவாசல் முன்பு முகூர்த்தக்கால் நடப்பட்டது

Posted by - February 1, 2017

ஜல்லிக்கட்டு 5-ந்தேதி நடைபெறுவதையொட்டி அவனியாபுரத்தில் முகூர்த்தக்கால் நடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

ஜல்லிக்கட்டு வன்முறை: விசாரணை ஆணைய தலைவர் நியமனம்

Posted by - February 1, 2017

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது நடந்த வன்முறை தொடர்பாக விசாரணை நடத்தும் ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொய்யுரைக்கின்றார் பந்துல-எஸ்.பி

Posted by - February 1, 2017

பந்துல குணவர்தன பொய்யுரைக்கின்றார் என சமூக வலுவூட்டல் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அமைச்சில் நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், கூட்டு எதிர்க்கட்சியின் சில உறுப்பினர்களது குடியுரிமை ரத்து செய்யப்பட உள்ளதாக பந்துல குணவர்தன செய்து வரும் பிரச்சாரம் அடிப்படையற்றது. ஒருவரின் குடியுரிமையை ரத்து செய்வது என்பது நினைக்கும் அளவிற்கு சுலபமான காரியமல்ல. இவ்வாறு குடியுரிமையை ரத்து செய்ய வேண்டுமாயின் அதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு (கருணா) விருது ஒன்று வழங்க வேண்டும் -இராணுவத்தினரின் அமைப்பு

Posted by - February 1, 2017

முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு (கருணா) விருது ஒன்று வழங்க வேண்டும் என தாய்நாட்டுக்கான இராணுவத்தினரின் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தில் வெற்றி பெற, இலங்கை இராணுவத்தினருக்கு கருணா பாரிய பங்களிப்பைச் செய்துள்ளார். சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்ஷல் பட்டம் வழங்கப்படுள்ள நிலையில், கருணாவுக்கு விருது ஒன்றை வழங்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட பீல்ட் மார்ஷல் பட்டத்தை மீளப்பெற வேண்டும் என தாய்நாட்டுக்கான இராணுவத்தினரின் அமைப்பின் இணைப்பாளர் சட்டத்தரணி அஜித் பிரசன்ன வலியுறுத்தியுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருக்கும்வரை வடக்கு – கிழக்கு மீளிணைப்பு கனவிலும் நிகழாது- மஹிந்த அமரவீர

Posted by - February 1, 2017

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருக்கும்வரை சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை. அத்துடன், வடக்கு – கிழக்கு மீளிணைப்பு கனவிலும் நிகழாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர இதனை தெரிவித்தார். தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “தேசிய பிரச்சினைக்கு உடனடியாக அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் இருக்கின்றோம். அதற்கான ஏற்பாடுகளையும்

புதிய தேசிய பாதுகாப்புச் சட்டவரைவை எதிர்வரும் பெப்ரவரி மாத இறுதியில்………………….

Posted by - February 1, 2017

புதிய தேசிய பாதுகாப்புச் சட்டவரைவை எதிர்வரும் பெப்ரவரி மாத இறுதியில் அல்லது மார்ச் மாதத்தில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்க அரசு தீர்மானித்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது. பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாகப் புதிய சட்டமொன்றை கொண்டு வருவது குறித்த கலந்துரையாடல் ஒன்று கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது என்று அரச தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டது எனக் கூறப்படுகின்றது. இந்தச் சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன,

சார்பு அரசியலை முன்னெடுக்க முயற்சிக்கின்றமையே, சுமந்திரன் கொலை முயற்சிக்கான காரணம் -பாட்டலி சம்பிக்க ரணவக்க

Posted by - February 1, 2017

சார்பு அரசியலை முன்னெடுக்க முயற்சிக்கின்றமையே சுமந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை கொலை செய்வதற்கு முயற்சிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல்மாகாண அபிவிருத்தி மற்றும் பெருநகரம் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனை தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விஷேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட சுமந்திரன் போன்றவர்கள் அரசாங்கத்துடன் சார்பான அரசியலை முன்னெடுத்துள்ளனர். இதன் காரணமாக அவர்களுக்கு எதிரானவர்கள் அவர்களை கொலை செய்ய முயற்சிக்கின்றனர்.

அமைச்சுப் பதவியை இல்லாமல் போனாலும் நான் யாரிடமும் மன்னிப்பு கோரப் போவதில்லை-ரஞ்சன் ராமநாயக்க

Posted by - February 1, 2017

அமைச்சுப் பதவியை இழக்க நேரிட்டாலும் மன்னிப்பு கோரப் போவதில்லை என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு பத்திரிகையொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், அமைச்சுப் பதவியை இல்லாமல் போனாலும் நான் யாரிடமும் மன்னிப்பு கோரப் போவதில்லை. எனக்கு எதிராக போராட்டம் நடத்திய அரச அதிகாரிகள் தவறிழைத்துள்ளனர். பணிக்கு சமூகமளித்து அங்கிருந்து போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இது ஓர் பிழையான விடயமாகும். திவுலப்பிட்டிய அகரகம பிரதேசத்தில் சட்ட விரோத

பலவீனமான தொகுதி அமைப்பாளர்கள் நீக்கப்பட்டு அந்த சந்தர்ப்பம், தகுதியான புதியவர்களுக்கு வழங்கப்படும்-கபீர் ஹாசிம்

Posted by - February 1, 2017

திறமையற்ற தொகுதி அமைப்பாளர்கள் நீக்கப்பட உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.  ஊடகமொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், மக்களுடன் நெருக்கமாக பழக முடியாத, கட்சியின் கொள்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க முடியாதவர்கள் தொகுதி அமைப்பாளர் பதவியை வகிக்கத் தகுதியற்றவர்கள். இவ்வாறு பலவீனமான தொகுதி அமைப்பாளர்கள் நீக்கப்பட்டு அந்த சந்தர்ப்பம் தகுதியான புதியவர்களுக்கு வழங்கப்படும். ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் அடிப்படையில் தொகுதி அமைப்பாளர் பதவி