முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு (கருணா) விருது ஒன்று வழங்க வேண்டும் -இராணுவத்தினரின் அமைப்பு

348 0

முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு (கருணா) விருது ஒன்று வழங்க வேண்டும் என தாய்நாட்டுக்கான இராணுவத்தினரின் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தில் வெற்றி பெற, இலங்கை இராணுவத்தினருக்கு கருணா பாரிய பங்களிப்பைச் செய்துள்ளார்.

சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்ஷல் பட்டம் வழங்கப்படுள்ள நிலையில், கருணாவுக்கு விருது ஒன்றை வழங்க வேண்டும்.

அவ்வாறு இல்லையெனில் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட பீல்ட் மார்ஷல் பட்டத்தை மீளப்பெற வேண்டும் என தாய்நாட்டுக்கான இராணுவத்தினரின் அமைப்பின் இணைப்பாளர் சட்டத்தரணி அஜித் பிரசன்ன வலியுறுத்தியுள்ளார்.

பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மற்றும் பொலிஸ் புலனாய்வு பிரிவு ஆகியவற்றை இல்லாதொழிக்கும் நடவடிக்கையில் குற்றப் புலனாய்வு திணைக்களம் ஈடுபடுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தாய்நாட்டுக்கான இராணுவத்தினரின் அமைப்பின் இணைப்பாளர் சட்டத்தரணி அஜித் பிரசன்ன இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவால் பிரித்தெடுக்கப்பட்ட கருணாவை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவும் சரியாக பயன்படுத்தியுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.