அமைச்சுப் பதவியை இல்லாமல் போனாலும் நான் யாரிடமும் மன்னிப்பு கோரப் போவதில்லை-ரஞ்சன் ராமநாயக்க

270 0

அமைச்சுப் பதவியை இழக்க நேரிட்டாலும் மன்னிப்பு கோரப் போவதில்லை என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு பத்திரிகையொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

அமைச்சுப் பதவியை இல்லாமல் போனாலும் நான் யாரிடமும் மன்னிப்பு கோரப் போவதில்லை. எனக்கு எதிராக போராட்டம் நடத்திய அரச அதிகாரிகள் தவறிழைத்துள்ளனர்.

பணிக்கு சமூகமளித்து அங்கிருந்து போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இது ஓர் பிழையான விடயமாகும். திவுலப்பிட்டிய அகரகம பிரதேசத்தில் சட்ட விரோத மண் அகழ்வு நடவடிக்கைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலையீட்டில் நிறுத்தப்பட்டதாக அறியக் கிடைத்தது.

கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் குடும்பத்தினரே இவ்வாறு மண் அகழ்ந்துள்ளனர் என சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

அண்மையில் சட்டவிரோத மண் அகழ்விற்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என திவுலப்பிட்டிய பிரதேச செயலாளரை திட்டிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஊடகங்களின் எதிரில் ரஞ்சன் ராமநாயக்க பிரதேச செயலாளரை தொலைபேசியில் கடும் தொனியியில் திட்டியிருந்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ரஞ்சன் ராமநாயக்க மன்னிப்பு கோரும் வரையில் போராட்டம் நடத்தப்படும் எனவும், எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரையில் மன்னிப்பு கோர கால அவகாசம் வழங்கப்படும் எனவும் பிரதேச அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.