பொய்யுரைக்கின்றார் பந்துல-எஸ்.பி

371 0

பந்துல குணவர்தன பொய்யுரைக்கின்றார் என சமூக வலுவூட்டல் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அமைச்சில் நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

கூட்டு எதிர்க்கட்சியின் சில உறுப்பினர்களது குடியுரிமை ரத்து செய்யப்பட உள்ளதாக பந்துல குணவர்தன செய்து வரும் பிரச்சாரம் அடிப்படையற்றது.

ஒருவரின் குடியுரிமையை ரத்து செய்வது என்பது நினைக்கும் அளவிற்கு சுலபமான காரியமல்ல. இவ்வாறு குடியுரிமையை ரத்து செய்ய வேண்டுமாயின் அதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமை ரத்து செய்யப்பட்ட போது அதற்கு இரண்டு தடவைகள் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களது குடியுரிமையை ரத்து செய்ய வேண்டிய அவசியமில்லை.

அவர்களுடன் இணைந்து முன்னோக்கி நகரும் திட்டத்தையே நாம் கொண்டுள்ளோம். ஏதேனும் குற்றச்சாட்டு ஒன்றின் பேரில் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் ஏழு ஆண்டுகள் குடியுரிமை ரத்து செய்யப்படக்கூடிய சாத்தியமுண்டு.

எனினும் நான் அந்த தடையை தகர்த்து எறிந்து மத்திய மாகாணசபையில் போட்டியிட்டு 189000 வாக்குகளைப் பெற்றுக் கொண்டிருந்தேன் என எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.