தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தேடிப்பார்த்து அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியுள்ளது-சீ.வி.விக்னேஸ்வரன்

Posted by - February 4, 2017

வடக்கில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு தேடாமல் கூட்டங்களிலும் விளையாட்டுப் போட்டிகளின் போதும் “நாம் அனைவரும் இலங்கையர்” என்று கூறுவது அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் கருத்துக்கு பதில் வழங்கும் முகமாகவே அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைக் கூறியுள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தேடிப்பார்த்து அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியுள்ளதாக அவர் கூறியுள்ளார். அண்மையில் எனது நண்பர் அமைச்சர் தயாசிறி ஜயசேகர, என்னை

மன்னார் கறுப்புக் கொடிப்போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு

Posted by - February 4, 2017

மன்னாரில் இன்று நடத்தப்படவிருந்த கறுப்புக் கொடிப்போராட்டத்திற்கு மன்னார் நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இலங்கையின் 69வது சுதந்திர தினத்தை தமிழ் மக்கள் முழுமையாக புறக்கணிக்க வேண்டும் என மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்திருந்தது. இதற்கமைய, இன்று காலை மன்னாரில் இடம்பெறும் கறுப்புக் கொடி போராட்டத்தில் பங்கேற்றுகுமாறும் அழைப்பு விடுத்திருந்தது. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த கறுப்புக் கொடி போராட்டம் முன்னெடுக்கப்படவிருந்தது. இந்த நிலையில், குறித்த கறுப்புக்கொடி போராட்டத்துகு;கு மன்னார்

தேசிய கல்வியற் கல்லூரிகளுக்கான மாணவர்களை உள்வாங்குவதற்கான நேர்முகத் தேர்வுகள் அடுத்த வாரம்

Posted by - February 4, 2017

தேசிய கல்வியற் கல்லூரிகளுக்கு புதிதாக மாணவர்களை உள்வாங்குவதற்கான நேர்முகத் தேர்வுகள் அடுத்த வாரம் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. நாடுமுழுவதுமுள்ள 19 கல்வியற் கல்லூரிகளில் 27 கற்கை நெறிகளுக்காக இந்த நேர்முகத் தேர்வுகள் இடம்பெறவுள்ளன. இந்த முறை 4 ஆயிரத்து 69 பேர் கல்வியற் கல்லூரிகளுக்கு உள்வாங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மஹிந்த ராஜபக்ச நேற்றைய தினம் திடீரென மத்தல விமான நிலையத்திற்கு விஜயம்

Posted by - February 4, 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்றைய தினம் திடீரென மத்தல விமான நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அவசர விமான பயணம் ஒன்று மேற்கொள்வதற்காகவே மஹிந்த அங்கு சென்றுள்ளார். எனினும் அவர் எங்கு விஜயம் மேற்கொண்டார் என்பது தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை. இதன் போது அங்கு சேவையில் ஈடுபட்டிருந்த ஊழியர்களுடன் மஹிந்த கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அத்துடன் விமான நிலையத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஊழியர்களிடம், மஹிந்த கேட்டு தெரிந்து கொண்டார். குறித்த சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்

யாழ் வாள்வெட்டு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய ஐந்து சந்தேக நபர்களுக்கும் விளக்கமறியல்

Posted by - February 4, 2017

யாழில் அண்மைக்காலங்களில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேககிக்கப்பட்டு கைதுசெய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்மைக்காலமாக யாழில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் ஐந்து நபர்கள் கடந்த 31 ஆம் திகதி யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 7 கூரிய வாள்கள், இரண்டு கைக்கோடரி ,சிறிய கத்தி , கைத்தொலைபேசி, முகமூடி தொப்பி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுதந்திர தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்கவுள்ள கேப்பாப்பிலவு மக்கள்…………..

Posted by - February 4, 2017

இலங்கையின் 69ஆவது சுதந்திர தினம்   அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில்,  துக்க தினமாக அனுஷ்டிக்கவுள்ளதாக தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு கிராம மக்கள் எச்சரித்துள்ளனர். இதேவேளை, தமது காணிகளை ஆக்கிரமித்துள்ள ராணுவத்தினரை அங்கிருந்து வெளியேற்றி தங்களின் காணிகளை விடுவிக்க ஜனாதிபதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கிய மக்களின் காணிகளை ஆக்கிரமித்துள்ள படையினர், அங்கு ராணுவ மற்றும் விமானப்படை தளத்தினை அமைத்துக்கொண்டு மக்களை உள்நுழைய

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிளவடைந்து தனித்து போட்டியிட மஹிந்த ராஜபக்ச நடவடிக்கை எடுத்தால் அவர் நிரந்தரமாக அரசியலில் தனிமைப்பட நேரிடும்-மஹிந்த அமரவீர

Posted by - February 4, 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நிரந்தரமாக தனிமைப்பட நேரிடும் என அமைச்சர் மஹிந்த அமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில்… எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிளவடைந்து தனித்து போட்டியிட மஹிந்த ராஜபக்ச நடவடிக்கை எடுத்தால் அவர் நிரந்தரமாக அரசியலில் தனிமைப்பட நேரிடும். இது ஓர் எதிர்வுகூறலாகும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவடையச் செய்து தனித்து அரசியல் பயணங்களை ஆரம்பித்த எவரும் வெற்றியடையவில்லை. அனுர

புலம்பெயர் தமிழர்களின் பணத்திற்காக புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படவில்லை-சஜித் பிரேமதாச

Posted by - February 4, 2017

புலம்பெயர் தமிழர்களின் பணத்திற்காக புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படவில்லை என வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை சூரியவௌ பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட வெலிவௌ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் நேற்று அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்… தற்போதைய அரசாங்கம் புலம்பெயர் மக்களின் பணத்தைக் கொண்டு வாழ்ந்து வருவதாகவும், அவர்களின் தேவைக்காக புதிய அரசியல் அமைப்பு உருவாக்கி வருவதாகவும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை. பௌத்த மதத்திற்கான முன்னுரிமையை இல்லாமல் செய்யவோ, நாட்டின்

எமது நாட்டின் நலனைக் கருத்திற்கொண்டு இந்தக் கூட்டு முயற்சிக்கு நாம் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பு வழங்க முன்வரவேண்டும் -இரா. சம்பந்தன்

Posted by - February 4, 2017

கருத்தொருமைப்பாட்டின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதிலேயே நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது. எமது நாட்டின் நலனைக் கருத்திற்கொண்டு இந்தக் கூட்டு முயற்சிக்கு நாம் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பு வழங்க முன்வரவேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் விடுத்துள்ள சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- எமது 69வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இவ்வாழ்த்துச் செய்தியை வழங்கக் கிடைத்துள்ளமையையிட்டு நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். மக்கள் ஜனநாயகத்தின் உண்மையான பயனாளிகளாக இருப்பதற்கு உதவும்

சுதந்திர தினம் இன்று நாடு பூராகவும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் வவுனியாவில் கறுப்புக் கொடி …………………

Posted by - February 4, 2017

சுதந்திர தினம் இன்று நாடு பூராகவும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் வவுனியாவில் கறுப்புக் கொடி கட்டி எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. வவுனியா, தேக்கவத்தை ஏ9 வீதி பகுதியிலேயே வீதியின் இரு பகுதிகளிலும் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டு உள்ளன. வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் பெரும்பான்மையின மக்கள் அதிகமாக வாழும் பகுதியில் தேக்கவத்தை சுவசெவன என்னும் பெயரில் மசாஜ் நிலையம் ஒன்று இயங்கி வருகிறது. இதனை அகற்றுமாறு பொலிஸார் உள்ளிட்ட பல தரப்பிடமும் அப்பகுதி மக்கள் தெரிவித்த போதும் இதுவரை எந்த