தமிழ்கல்விக் கழகத்தினால் நடாத்தப்பட்ட கலைத்திறன்போட்டி 2017 யேர்மனி தென்மாநிலம்.
கல்வியும் கலையும் நம்மிருகண்கள், நல் தமிழ் மொழியெங்கள் உயிராகும். கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக யேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழ் மொழியையும், எமது கலை, பண்பாடுகளையும் தமிழாலயங்கள் ஊடாகப் போதித்துவரும் தமிழ்க் கல்விக் கழகம் தனதுவளர்ச்சிப் படிகளில் மீண்டும் ஒரு அலகைப் புரட்டுகின்றது. தமிழாலயங்களில் கல்விபயிலும் மாணவர்களுக்கு தேர்வு, தமிழ்த்திறன் போன்ற முக்கிய நிகழ்வுகளின் ஊடாக மாணவர்களின் திறனுக்கு களம் அமைத்து அவர்களின் கல்வித் திறனில் உயர்ந்து நிமிர்ந்து நிற்கும் தமிழ்க் கல்விக்கழகம், இவ்வாண்டிலிருந்து தமிழாலய

