அலரி மாளிகை முன்பாக இந்திய பிரஜை கைது!

412 0

இந்திய நாட்டு பிரஜை ஒருவர் அலரி மாளிகை முன்னபாக இருந்து புகைப்படம் பெற முயற்சி செய்தமையால் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் இன்று மதியம் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சந்தேக நபர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொள்ளுப்பிட்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நபர் 35 வயதுடையவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.