மொறட்டுவை மரக்கட்டை ஆலை ஒன்றில் அடுக்கி வைக்கப்பட்டிந்த மரக்கட்டை விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தினை தொடர்ந்து படுகாயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மொறட்டுவை பிரதேசத்தை சேர்ந்த 65 வயது நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

