ருகுணு பல்கலைக்கழகத்தின் வெல்லமடம பீடம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதேச மக்களுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் நிலை காரணமாகவே வெல்லமடம பீடம் இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ருகுணு பல்கலைக்கழகத்தின் வெல்லமடம வளாகத்தில் உள்ள 05 கல்வி பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகப்பிரிவு அறிவித்துள்ளது.
மேலும், இன்று மாலை 6.00 மணிக்கு முன்னர் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து வெளியேறுமாறு மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

