வாழை தோட்டம் என்ற போர்வையில் கஞ்சா தோட்டம் – ஒருவர் கைது
பண்டாரவெல – கொஸ்லந்த – உஸ்எல்ல பிரதேசத்தில் வாழை தோட்டம் என்ற போர்வையில், கஞ்சா தோட்டத்தை நடத்திச்சென்ற ஒருவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். காவற்துறையினருக்கு கிடைத்த விசேட தகவலின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது. சுமார் அரை ஏக்கர் காணிப்பரப்பிலேயே இந்த கஞ்சா தோட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது கைது செய்யப்பட்டவரிடம் இருந்து மரை இறைச்சியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

