மட்டக்களப்பில் காணி மற்றும் வீடு இல்லாதவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முதலமைச்சர் நடவடிக்கை

Posted by - February 5, 2017

மட்டக்களப்பில் காணி மற்றும் வீடு இல்லாதவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். குறித்த விடயத்தை முதலமைச்சர் இன்று தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், குறித்த பிரச்சினையை தீர்ப்பதற்கான ஒரு கட்டமாக கடந்த முதலாம் திகதி ஜனாதிபதியின் ஏறாவூர் விஜயத்தில் 1,762 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் சிங்களம், முஸ்லிம் மற்றும் தமிழ் என மூவின மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டதாகவும் கூறினார் மேலும்,

முஸ்லிம் மக்களுக்கு வலைவீசும் மகிந்த ராஜபக்ஷ…………

Posted by - February 5, 2017

குருநாகல் மல்லவப்பிட்டிய பகுதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் முற்போக்கு முன்னணி நேற்றைய தினம் ஒரு சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளது. குறித்த சந்திப்பில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துக் கொண்டார். குறித்த சந்திப்பின் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது உத்தியோகப்பூர்வ முகப்புத்தக கணக்கில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த சந்திப்பில் ஜொன்ஸ்டன் பெர்ணாண்டோ,சனத் நிசாந்த உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் ஜீ.எல்.பீரிஸ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.

தமிழகத்தின் 12வது முதல்வராகிறார் சசிகலா

Posted by - February 5, 2017

தமிழகத்தின் 12வது முதலமைச்சராக வி.கே சசிகலா பொறுப்பேற்கவுள்ளார். சென்னையில் அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க., சட்டசபை குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், சசிகலா வரும் 7 அல்லது ஆம் திகதி தமிழக முதல்வராக பதவியேற்பார் எனக்கூறப்படுகிறது. இதன்படி தமிழகத்தின் 12வது முதலமைச்சராகவும் தமிழகத்தின் 3வது பெண் முதலாமைச்சராகவும் பதவியேற்க உள்ளார்.

பங்காளதேச முக்கிய அரசியல் தலைவர் சுரஞ்சித் சென்குப்தா காலமானார்.

Posted by - February 5, 2017

1972ஆம் ஆண்டில் பங்காளதேச நாடு சுதந்திரமடைந்தவுடன் புதிதாக அரசியல் சாசனம் வடிவமைக்கப்பட்டது. அதில் முக்கிய பங்காற்றிய சுரஞ்சித் சென்குப்தா, சிறுபான்மையினரான இந்து மதத்தைச் சார்ந்தவர். ஆளும் அவாமி லீக் கட்சியின் சார்பில் ரெயில்வே, பாராளுமன்ற விவகாரத் துறை மந்திரியாக பணியாற்றிய அனுபவம் உடையவர். 72 வயதான சுரஞ்சித், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சுரஞ்சித்தின் மறைவுக்கு பங்காளதேச ஜனாதிபதி ஹமீத் இரங்கல் தெரிவித்துள்ளார். தனது

பாகிஸ்தானில் பனிச்சரிவு – 13 பேர் உயிரிழப்பு

Posted by - February 5, 2017

பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. சித்ரல் நகரில் நேற்று பின்னிரவில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக 5 வீடுகள் பனியால் மூடப்பட்டன. இதையடுத்து மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது இடிபாடுகளில் சிக்கியிருந்த 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும், யாராவது உயிருடன் இருக்கிறார்களா? என தேடி வருகின்றனர். சித்ரல் நகரின் பெரும்பாலான பகுதிகள் பனியால் மூடப்பட்டதால், பலரைக் காணவில்லை. இவர்களில் சிலர், ஏற்கனவே அப்பகுதியில் இருந்து

ஜெயலலிதாவின் கனவுகளை நிறைவேற்றுவேன் – சசிகலா

Posted by - February 5, 2017

அ.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சட்டமன்றக் கட்சி தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். சட்டமன்றக் கட்சி தலைவராக சசிகலாவை தேர்வு செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை முதலமைச்சரும் கட்சியின் பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். இந்த தீர்மானத்தை அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஆதரித்ததையடுத்து சசிகலா ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டார். தேர்வு செய்யப்பட்ட பின்னர், எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் சசிகலா தமிழக முதலமைச்சராக வேண்டும் என உங்கள்

சசிகலா 7ஆம் அல்லது 9ஆம் திகதி பதவியேற்பு

Posted by - February 5, 2017

சசிகலா தமிழக முதல்வராக, வரும் 7 அல்லது 9ஆம் திகதி பதவியேற்பார் எனக்கூறப்படுகிறது.   சென்னையில் அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் சசிகலா கலந்து கொள்ளவில்லை. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க., சட்டசபை குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதனை முதல்வர் பன்னீர்செல்வம் முன்மொழிந்து பேசுகையில்,‛ முதல்வராகிய நான், சட்டசபை குழு தலைவராக சசிகலாவை முன்மொழிகிறேன். அனைவரும் வழிமொழிவார்கள் என நம்புகிறேன்’ எனக்கூறினார். தொடர்ந்து இந்த கூட்டத்தில் சசிகலா

முதல்வராக என்னை பன்னீர் வலியுறுத்தினார் – சசிகலா

Posted by - February 5, 2017

அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏ.,க்கள் மத்தியில் சசிகலா உரையாற்றினார். ஜெ., மறைவுக்கு பின், நான் தான் பொது செயலாளராக பொறுப்பேற்க வேண்டுமென பன்னீர்செல்வம் வலியுறுத்தினார். தற்போது நான் முதல்வராக பதவியேற்க வேண்டுமென அவர் தான் வலியுறுத்தினார். ஜெ.,வின் கொள்கைகளை கட்டிகாக்கும் வகையில் அரசு செயல்படும். மக்களுக்கான அரசாக அதிமுக அரசு செயல்படும் எனக்கூறினார்.

தமிழக முதல்வராகிறார் சசிகலா

Posted by - February 5, 2017

சென்னையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது. இதில், முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர். அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா பங்கேற்கவில்லை. கூட்டத்தில், கட்சியின் சட்டசபை குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். முதல்வர் பன்னீர் செல்வம் ராஜினாமா செய்தார். இதன் மூலம், தமிழகத்தின் அடுத்த முதல்வராக சசிகலா பொறுப்பேற்க உள்ளார்.