பங்காளதேச முக்கிய அரசியல் தலைவர் சுரஞ்சித் சென்குப்தா காலமானார்.

244 0
1972ஆம் ஆண்டில் பங்காளதேச நாடு சுதந்திரமடைந்தவுடன் புதிதாக அரசியல் சாசனம் வடிவமைக்கப்பட்டது.
அதில் முக்கிய பங்காற்றிய சுரஞ்சித் சென்குப்தா, சிறுபான்மையினரான இந்து மதத்தைச் சார்ந்தவர்.
ஆளும் அவாமி லீக் கட்சியின் சார்பில் ரெயில்வே, பாராளுமன்ற விவகாரத் துறை மந்திரியாக பணியாற்றிய அனுபவம் உடையவர்.
72 வயதான சுரஞ்சித், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
சுரஞ்சித்தின் மறைவுக்கு பங்காளதேச ஜனாதிபதி ஹமீத் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தனது இரங்கல் செய்தியில். “சுரஞ்சித் அரசியல் தலைவராகவும் மட்டுமல்லாமல் சிறந்த பாராளுமன்றவாதியாகவும் செயல்பட்டார்” என புகழாரம் சூட்டியுள்ளார்.
மேலும், பங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் பங்காளதேசத்திற்கான இந்தியத் தூதர் ஆகியோர் தங்களது இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.
சுரஞ்சித்தின் இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.