பாகிஸ்தானில் பனிச்சரிவு – 13 பேர் உயிரிழப்பு

236 0

பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவுகிறது.

சித்ரல் நகரில் நேற்று பின்னிரவில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக 5 வீடுகள் பனியால் மூடப்பட்டன.

இதையடுத்து மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது இடிபாடுகளில் சிக்கியிருந்த 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும், யாராவது உயிருடன் இருக்கிறார்களா? என தேடி வருகின்றனர்.

சித்ரல் நகரின் பெரும்பாலான பகுதிகள் பனியால் மூடப்பட்டதால், பலரைக் காணவில்லை. இவர்களில் சிலர், ஏற்கனவே அப்பகுதியில் இருந்து வெளியேறியிருக்கலாம் என கூறப்படுகிறது.

குளிர்காலத்தின்போது பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் பனிச்சரிவு ஏற்படுவது வழக்கமான நிகழ்வாகும்.

விவசாயம், தொழிற்சாலைகள் மற்றும் குடிநீர் தேவைக்கு நீராதாரமாக விளங்கும் பனிப்பாறைகள் இப்பகுதியில் தான் உள்ளன.