ஆளும் அரசாங்கத்தின் மோசடிகாரர்கள் குறித்து ஆராய வேண்டும் – சந்திரிகா

Posted by - February 6, 2017

கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து ஆராய்வதற்கு முன்னர் தற்போதைய அரசாங்கத்தில் இடம்பெறும் மோசடிக்களை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க இந்த கோரிக்கைவிடுத்துள்ளார். அத்தனகலையில் நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பில் போதே அவர் இதனை குறிப்பிட்டார். ஆளும் அரசாங்கம் கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து ஆராய்கின்றது. எனினும் தற்போதைய அரசாங்கத்திலும் மோசடிகளில் ஈடுபடும் அமைச்சர்கள் உள்ளனர். அவ்வாறு மோசடியில் ஈடுபடுபவர்கள் குறித்து

யெமன் உள்நாட்டு போர் – இலங்கையர்கள் மீட்பு

Posted by - February 6, 2017

யெமன் உள்நாட்டு போர் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக கப்பல் ஒன்றில் சிக்கியிருந்த 8 இலங்கையர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். ஓமானிலுள்ள இலங்கை தூதரகத்தின் தலையீட்டின் மூலம் அவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கு முன்னதாக குறித்த இலங்கையர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவந்த நிலையில் யுத்தம் காரணமாக அந்த முயற்சி கைகூடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

நடராஜன் உடல்நலக் குறைவு காரணமாக அப்பல்லோவில் அனுமதி

Posted by - February 6, 2017

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் ம.நடராஜன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் ம.நடராஜன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் சோர்வு காரணமாக ம.நடராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அப்பல்லோவின் நான்காவது மாடியில் உள்ள ‘எல்’ வார்டில் ம.நடராஜன் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர் ரத்த அழுத்தம் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை முடிந்து சிறிது

ஈழத்தமிழரின் கனதியான கடந்தகாலம்

Posted by - February 5, 2017

வரலாறென்பது திரும்பத் திரும்ப நிகழும் ஒரு இயக்கம் என்பதால் எமது அரசியல் பற்றித் தொடர் மீட்டல்கள் செய்தேயாக வேண்டியுள்ளது. எப்போதுமே எதையுமே தொடக்கத்தில் இருந்தே சொல்லவேண்டியிருப்பதே ஒருவகை வரலாற்று அவலம் என்பார்கள்.

மஹிந்தவின் குடியுரிமை ரத்து செய்யப்படாது: ராஜித சேனாரத்ன!

Posted by - February 5, 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குடியுரிமை ரத்து செய்யப்படாது என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சுமந்திரன் படுகொலை சதித் திட்டம்! சந்தேக நபர்கள் மீது போதைப் பொருள் குற்றச்சாட்டு!

Posted by - February 5, 2017

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்வதற்கு அண்மையில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் 5 பேரும் திட்டம் தீட்டினார்கள் என பொலிஸார் நீதிமன்றில் கூறவில்லை. அவர்கள் மீது போதை பொருட்களை வைத்திருந்ததாகவே குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கை அணியின் தலைவராக உபுல் தரங்க

Posted by - February 5, 2017

அவுஸ்திரேலியாவுடன் இடம்பெறவுள்ள இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியின் போது இலங்கை அணிக்கு உபுல் தரங்க தலைமை தாங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண குடாநாட்டில் 17 ஆயுத குழுக்கள்

Posted by - February 5, 2017

யாழ்ப்பாண குடா நாட்டில் வாள் போன்ற கூரிய ஆயுதங்களை கொண்டுள்ள 17 குழுக்கள் இயங்கி வருவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சாதாரண தரப் பரீட்சைக்கான செயல்முறை பரீட்சை இம்மாதம் 21ம் திகதி

Posted by - February 5, 2017

2016ம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான செயல்முறை பரீட்சை இம்மாதம் 21ம் திகதி ஆரம்பமாவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அலரி மாளிகைக்கு எதிரில் புகைப்படம் எடுத்த இந்திய பிரஜை பொலிஸ் பிணையில் விடுதலை

Posted by - February 5, 2017

அலரி மாளிகைக்கு எதிரில் புகைப்படம் எடுத்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இந்திய பிரஜை பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் அவரை விடுதலை செய்ததாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். அலரி மாளிகைக்கு எதிரில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த 36 வயதான இந்திய பிரஜை நேற்று முற்பகல் கைது செய்யப்பட்டார். அவர் வத்தளை பிரதேசத்தில் வசித்து வரும் இந்திய பிரஜையென ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்தது. தொழில் வீசாவில் இலங்கையில் தங்கியிருக்கும் அவர் இதற்கு முன்னர்