யெமன் உள்நாட்டு போர் – இலங்கையர்கள் மீட்பு

340 0

யெமன் உள்நாட்டு போர் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக கப்பல் ஒன்றில் சிக்கியிருந்த 8 இலங்கையர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

ஓமானிலுள்ள இலங்கை தூதரகத்தின் தலையீட்டின் மூலம் அவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்கு முன்னதாக குறித்த இலங்கையர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவந்த நிலையில் யுத்தம் காரணமாக அந்த முயற்சி கைகூடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.