அலரி மாளிகைக்கு எதிரில் புகைப்படம் எடுத்த இந்திய பிரஜை பொலிஸ் பிணையில் விடுதலை

347 0

அலரி மாளிகைக்கு எதிரில் புகைப்படம் எடுத்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இந்திய பிரஜை பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் அவரை விடுதலை செய்ததாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அலரி மாளிகைக்கு எதிரில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த 36 வயதான இந்திய பிரஜை நேற்று முற்பகல் கைது செய்யப்பட்டார்.

அவர் வத்தளை பிரதேசத்தில் வசித்து வரும் இந்திய பிரஜையென ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்தது.

தொழில் வீசாவில் இலங்கையில் தங்கியிருக்கும் அவர் இதற்கு முன்னர் சந்தேகத்திற்கிடமான எதனையும் மேற்கொள்ளவில்லை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.