கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து ஆராய்வதற்கு முன்னர் தற்போதைய அரசாங்கத்தில் இடம்பெறும் மோசடிக்களை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க இந்த கோரிக்கைவிடுத்துள்ளார்.
அத்தனகலையில் நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பில் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
ஆளும் அரசாங்கம் கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து ஆராய்கின்றது.
எனினும் தற்போதைய அரசாங்கத்திலும் மோசடிகளில் ஈடுபடும் அமைச்சர்கள் உள்ளனர்.
அவ்வாறு மோசடியில் ஈடுபடுபவர்கள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் சந்திரிகா கோரியுள்ளார்.

