போதை பொருளற்ற நாட்டை உருவாக்குவதற்கு ஜனாதிபதி யோசனை

Posted by - February 6, 2017

போதை பொருளற்ற நாட்டை உருவாக்குவதற்கு முன்னிலைப்படுத்தப்பட வேண்டியது, குடும்பம் என்ற கட்டமைப்பே என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மொறட்டுவ பிரதேச பாடசாலை ஒன்றில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார். மொறட்டுவை, தெஹிவளை, வெள்ளவத்தை, கல்கிஸ்சை மற்றும் கொழும்பில் இருந்து நீர்கொழும்பு வரையிலான பிரதேச மக்கள் பெருமளவு போதைக்கு அடிமைக்கப்பட்டுள்ளனர். வயது குறைந்தவர்கள் ஆனாலும் சமூகத்தில் இளையவர்களால் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் பரந்து பட்டதாக உள்ளது. எனவே இளைய சமூகத்தினர் போதை பொருளுக்கு

முன்னாள் பிரதியமைச்சர் தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகல்

Posted by - February 6, 2017

முன்னாள் பிரதியமைச்சர் சந்ரசிறி சூரியஆராச்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மின்னேரிய தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காகவே தாம் தமது பதவியில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்தார். இந்த நிலையில், தமது பதவி விலகல் கடிதத்தை முன்னாள் பிரதி அமைச்சர் சந்ரசிறி சூரியஆராச்சி இன்று முற்பகல் சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் கையளித்துள்ளார்.

கிரிக்கெட் அணி வீரர் வீட்டில் கொள்ளை

Posted by - February 6, 2017

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் மெண்டிஸின் பாணந்துறை வீட்டில் களவுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சுமார் 3 லட்சத்து 10 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாக கெசல்வத்தை காவல்துறையில் முறையிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் இது வரையில் ஒருவரும் கைது செய்யப்படவில்லை என்றும், அது தொடர்பில் பாணந்துறை வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் உப காவல்துறை பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை – கனடா உறவில் வளர்ச்சி

Posted by - February 6, 2017

இலங்கைக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவு கடந்த வருத்தில் வளர்ச்சி போக்கை காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடனாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் 69வது சுதந்திர தின கொண்டாட்டம் நேற்று கடனாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் ஆலயத்தில் இடம்பெற்றது. இதன்போது ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி கனடாவுக்கான கனேடிய உயஸ்தானிகர் அஹமட் ஏ ஜாவிட்டினால் வாசிக்கப்பட்டது.

திருகோணமலை கின்னியா இராவணேஸ்வரன் தமிழ் வித்தியாலயத்தின் பெயர்ப் பலகை திரை நீக்கம் செய்யும் நிகழ்வு(காணொளி)

Posted by - February 6, 2017

திருகோணமலை கின்னியா இராவணேஸ்வரன் தமிழ் வித்தியாலயத்தின் பெயர்ப்; பலகை திரை நீக்கம் செய்யும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினர்களாக, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைரெட்ணசிங்கம், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி, திருகோணமலை வலயக் கல்விப்பணிப்பாளர் விஜேந்திரன், கோட்டக் கல்விப்பணிப்பாளர் செல்வநாயகம் ஆகியோர் கொண்டனர். 1951ஆம் ஆண்டு கிண்ணியா அரசினர் தமிழ் கலவன் பாடசாலையாக பெயர் சூட்டப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலை, தற்போது கிண்ணியா இராவணேஸ்வரன் தமிழ் வித்திதயாலயம் என பெயர் மாற்றம்

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் சொத்து விபரங்களை அறிந்து கொள்ளும் நோக்கில் விண்ணப்பம்

Posted by - February 6, 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் சொத்து விபரங்களை அறிந்து கொள்ளும் நோக்கில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தின் அடிப்படையில் இந்த விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு டி.எஸ். சேனநாயக்க கல்லூரியின் பொன்விழா – எதிர்வரும் 10ஆம் திகதி

Posted by - February 6, 2017

கொழும்பு டி.எஸ். சேனநாயக்க கல்லூரியின் பொன்விழா எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ளவுள்ளதுடன், கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் ஆகியோரும் பங்குகொள்ள உள்ளனர். அன்றைய தினம் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளதுடன் பொன்விழா முத்திரையொன்றும் வெளியிடப்படவுள்ளது. அத்துடன், அன்றைய தினம் அங்கு கல்விபயிலும் அனைத்து மாணவர்களுக்கும் டிஜிட்டல் முறையிலான அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மாணவர்களின் வரவுகள் அனைத்தும் இந்த அடையாள அட்டை மூலம்

நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு ஜே.வி.பியின் ஆசிர்வாதமும் உள்ளது!

Posted by - February 6, 2017

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கைப்பாவை என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

யாழ் பல்கலைகழக கிளிநொச்சி பீட வளாகத்தில் புனரமைக்கப்பட்ட புத்த கோவிலும், மறுக்கப்படும் பிள்ளையாா் கோவிலும்

Posted by - February 6, 2017

யாழ் பல்கலைகழத்தின் கிளிநொச்சி அறிவியல்நகா் பீடங்களில் சிறியளவில் பிள்ளையாா் கோவில் ஒன்றை அமைத்து வழிபடும் மாணவா்களின் முயற்சிக்கு நிர்வாகம் மறுப்புத் தெரிவித்துள்ளது. இது ஒர் உயா் கல்வி நிலையத்தில் காணப்படவேண்டிய பன்மைத்துவத்தை கேள்விக்குள்ளாக்கியது எனவும் மாணவா்கள் குறிப்பிட்டுள்ளனா். யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகம் மீள்குடியேற்றத்தின் ஆரம்ப காலங்களில் பாரிய இராணுவ முகாமாக காணப்பட்டது. முன்னைய அரசின் காலத்தில் இராணுவத்திடம் இருந்து மீளப்பெறப்பட்ட காணி யாழ் பல்கலைகழக நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது. குறித்த காணியில் இராணுவம் இருந்த காலத்தில் அவா்களின்

தகவல் அறியும் சட்டம் ஜனநாயகத்திற்கு பலம் சேர்க்கும் : ஹிஸ்புல்லாஹ்

Posted by - February 6, 2017

நல்லாட்சி அரசு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. இது ஜனநாயகத்துக்கு பலம் சேர்க்கும் மாபெரும் வெற்றியாகும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.