கிரிக்கெட் அணி வீரர் வீட்டில் கொள்ளை

208 0

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் மெண்டிஸின் பாணந்துறை வீட்டில் களவுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சுமார் 3 லட்சத்து 10 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாக கெசல்வத்தை காவல்துறையில் முறையிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இது வரையில் ஒருவரும் கைது செய்யப்படவில்லை என்றும், அது தொடர்பில் பாணந்துறை வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் உப காவல்துறை பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார்.