முன்னாள் பிரதியமைச்சர் தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகல்

343 0

முன்னாள் பிரதியமைச்சர் சந்ரசிறி சூரியஆராச்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மின்னேரிய தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காகவே தாம் தமது பதவியில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், தமது பதவி விலகல் கடிதத்தை முன்னாள் பிரதி அமைச்சர் சந்ரசிறி சூரியஆராச்சி இன்று முற்பகல் சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் கையளித்துள்ளார்.