திருகோணமலை கின்னியா இராவணேஸ்வரன் தமிழ் வித்தியாலயத்தின் பெயர்ப் பலகை திரை நீக்கம் செய்யும் நிகழ்வு(காணொளி)

414 0

திருகோணமலை கின்னியா இராவணேஸ்வரன் தமிழ் வித்தியாலயத்தின் பெயர்ப்; பலகை திரை நீக்கம் செய்யும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினர்களாக, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைரெட்ணசிங்கம், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி, திருகோணமலை வலயக் கல்விப்பணிப்பாளர் விஜேந்திரன், கோட்டக் கல்விப்பணிப்பாளர் செல்வநாயகம் ஆகியோர் கொண்டனர்.

1951ஆம் ஆண்டு கிண்ணியா அரசினர் தமிழ் கலவன் பாடசாலையாக பெயர் சூட்டப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலை, தற்போது கிண்ணியா இராவணேஸ்வரன் தமிழ் வித்திதயாலயம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த பாடசாலையின் பெயர்ப்பலகை திரை நீக்கம் செய்யும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

ஆரம்ப காலத்தில் இப்பாடசாலையில் கல்வியில் பின்னடைவு காணப்பட்டாலும், தற்போதைய அதிபர் இப் பாடசாலையை பொறுப்பேற்ற பின், குறித்த பாடசாலை புலமைப் பரிசில் பரீட்சையிலும், சாதாரண தர பரீட்சையிலும் சித்தி பெறுமளவிற்கு, கல்வியில் வளர்சி கண்டுள்ளது.

மேலும் இந்நிகழ்வில் குறித்த பாடசாலையில் கல்வி கற்று சாதாரண தர பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.