வவுனியா புதிய பேரூந்து நிலையம் வெறிச்சோடிக் காணப்பட்டது(காணொளி)
வடபிராந்திய தனியார் போக்குவரத்து சேவையினர் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், வவுனியா புதிய பேரூந்து நிலையம் வெறிச்சோடிக் காணப்பட்டது. வடபிராந்திய தனியார் போக்குவரத்து சேவையினர் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதன் காரணமாக வடபகுதிக்கான உள்ளூர் மற்றும் மாவட்டங்களுக்கிடையிலான தனியார் போக்குவரத்து சேவை முழுமையாக பாதிப்படைந்துள்ளது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் உருவபொம்மைகள், எரிக்கப்படுவதை கண்டித்தும், வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரனின் உருவப்பொம்மை எரியூட்டப்பட்டதைக் கண்டித்தும், இலங்கை போக்குவரத்து சபையினரால் வடக்கின் அனைத்து மாவட்டங்களிலும் தனியார் பேருந்து உரிமையாளர்கள்,

