கேப்பாப்புலவில் நடைபெறும் போராட்டிற்கு ஆதரவான கையெழுத்துப் போராட்டம்

264 0

கேப்பாப்புலவில் நடைபெறும் போராட்டிற்கு ஆதரவான கையெழுத்துப் போராட்டத்திற் பங்குகொள்ளுமாறு உங்களையத் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றோம்.

கையெழுத்துப் போராட்டத்துக்கான இணையதளம்
https://www.change.org/p/sri-lanka-srilankan-state-force-mu…

——————————————————————————————

2017ம் ஆண்டு தமிழகத்தில் ஏற்பட்ட ஏறுதழுவுதலுக்கான எழுச்சியோடு புரடசிகரமாகத் தொடங்கியது. தமிழகத்தில் எங்களின் தொப்புட்கொடி உறவுகளான தமிழகத் தமிழர்கள் தொடக்கிவைத்த எழுச்சி தமிழீழத்துக்குப் பரவியுள்ளது. காணாமல் ஆக்கப்பட்ட நபர்களுக்காக வவுனியாவிற் தொடங்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் முடிவடைந்திருப்பினும், தமிழீழத்தின் கேப்பாப்புலவிலும் மற்றும் புதுக்குடியிருப்பிலும் மக்கள் தங்களின் சொந்தக் காணிகளை இராணுவத்திடமிருந்து மீளப்பெற ஒரு போராட்டத்தை நடத்திக்கொண்டு இருக்கிறர்கள். அத்தோடு இலங்கை இனவழிப்பு அரசின் சுதந்திர தினமன்று கறுப்புக்கொடிப் போராட்டங்கள் தமிழீழத்தில் நடைபெற்றுள்ளன.

இலங்கையின் இனவழிப்பு அரச படைகளின் ஆக்கிரமிப்புக்குள் இருந்துகொண்டு ஈழத்தமிழர்கள் இந்தப் போராட்டங்களை முன்னெடுப்பது, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மூன்றாம் தலைமுறையினராகிய எங்களுக்கு மகிழ்ச்சியினையும் மற்றும் ஊக்கத்தினையும் தருகின்றது. இருப்பினும் இலங்கை இனவழிப்பு அரசின் பொய்யான வாக்குமூலங்களை நம்பி உங்களின் போராட்டங்கள் திசைதிரும்புவதை அனுமதிக்க வேண்டாம் என்று உங்களிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். அத்தோடு பாதிக்கப்பட்ட நீங்களே இந்தப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்குமாறும் மற்றும் எந்தவொரு அரசியற்பிரமுகர்களையும் உள்நுழைய விடவேண்டாம் என்றும் உங்களை வேண்டிக்கொள்கின்றோம். ஏனெனில் இது எங்களுக்கு வரலாறு கற்பித்த பாடங்களாகும்.

உங்களின் போராட்ட வேட்கைக்கு வலுச்சேர்க்கும் முகமாக சில வேலைகளைச் செய்ய தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மூன்றாம் தலைமுறையினராகிய நாங்கள் முயற்சிக்கின்றோம். ஆனால் குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புக்கள் மௌனமாயிருப்பது கோபத்தை உண்டுபண்ணுகிறது.

நாங்கள் எப்போதும் உங்களுக்குப் பக்கபலமாக இருப்போம் என்று உறுதி எடுத்துக்கொள்கின்றோம்.

வெல்வது உறுதி