சசிகலாவுக்கு திருநாவுக்கரசர் ஆதரவு: மூத்த தலைவர்கள் கடும் எதிர்ப்பு
காங்கிரஸ் கட்சியின் ஆதரவை சசிகலா தரப்பினர் கேட்டதைத் தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிப்பதா அல்லது சசிகலாவை ஆதரிப்பதா என்பதில் காங்கிரஸ் தலைவர்களிடம் கருத்து வேறுபாடு உருவாகியுள்ளது. சசிகலா முதல்-அமைச்சராக பதவி ஏற்ற பிறகு அவருக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காவிட்டால், காங்கிரசின் 8 எம்.எல்.ஏ.க் களும் அவருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தை பாரதிய ஜனதா கட்சி மறைமுகமாக ஆதரிப்பதால், காங்கிரஸ் கட்சி சசிகலாவை

